சுஷாந்த் மேனேஜர் திஷா உடலில் இயற்கைக்கு மாறான காயங்கள்.. பிரேத பரிசோதனையில் வெளியான திடுக் தகவல்!
சென்னை: சுஷாந்த் சிங்கின் மேனேஜரான திஷா சாலியன் உடம்பில் இயற்கைக்கு மாறான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேனேஜராக இருந்தவர் திஷா சாலியன். இவர் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி அடுக்கு மாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது காதலருடன் இருந்த போது தற்கொலை செய்து கொண்டதாக அப்போது கூறப்பட்டது. அதன்பிறகு, அவரது வயிற்றில் பிரபல நடிகரான சூரஜ் பஞ்சோலியின் வாரிசு வளர்ந்ததாகவும் கூறப்பட்டது.

சந்தேகங்கள்
ஆனால் அதனை சூரஜ் பஞ்சோலி மறுத்துள்ளார் தனக்கு திஷா சாலியன் யார் என்று தெரியாதென்றும் அவரை பார்த்ததும் இல்லை பேசியதும் இல்லை என கூறி வருகிறார். திஷாவின் குடும்பத்தினரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

2 நாட்கள் தாமதம்
திஷா சாலியன் மரணமடைந்து 2 நாட்கள் கழித்து 11ஆம் தேதிதான் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த தாமதமே பலரின் புருவத்தை உயர்த்தியது. ஆனால் கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட்டுக்காக 2 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்யப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இயற்கைக்கு மாறாக காயம்
இந்நிலையில் திஷா சாலியன் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில், அவரது தலையில் காயம் இருந்ததாகவும் உடம்பிலும் இயற்கைக்கு மாறாக பல காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14வது மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டிலும் பல காயங்கள் அதற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெமிக்கல் அனாலிஸ்
அந்த காயங்களும் மரணத்திற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திஷா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதற்கான எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஒரு பெண் இயற்கைக்கு மாறாக இறக்கிறார் என்றால் அவரது வெஜினா குறித்து ஆய்வு செய்யப்படும். கெமிக்கல் அனாலிஸிஸ்க்கு உட்படுத்தப்படும்.

தொடர்ந்து விசாரணை
அந்த வகையில் திஷாவுக்கும் அந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, திஷாவின் தற்கொலை குறித்து பலமான சந்தேகம் உள்ளது. கட்டிடத்திலிருந்து தற்செயலாக விழுந்ததற்கான வாய்ப்பு இருப்பதை மும்பை காவல்துறை நிராகரிக்கவில்லை, அவர்கள் வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











