சஞ்சய்தத்தின் ‘போலீஸ் கிரி’யை பார்த்து கதறி அழுத மான்யதா தத்
மும்பை: சஞ்சய் தத் சிறைக்குச் சென்ற பிறகு, கணவரை சிறையில் பார்ப்பதற்காக மட்டுமே பெரும்பாலும் வெளியில் வந்தார் அவரது மனைவியான மான்யா தத்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் கணவருக்கு பதில் கடிதம் எழுதுவது, குழந்தைகளை கவனித்துக் கொள்வது என சரியான வேலைப்பளு மான்யாவுக்கு.
இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சஞ்சய்தத் கடைசியாக நடித்த படம் 'போலீஸ் கிரி'. இன்று திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள அப்படத்தின் சிறப்புக் காட்சி மான்யாவிற்கு மட்டும் பிரத்யேகமாக போட்டு காட்டப்பட்டதாம்.

ஸ்பெஷல் ஷோ...
மும்பையில் உள்ள கெட்னவ் தியேட்டருக்குள் நுழையும் போதே படு சோகமாக காணப்பட்டார் மான்யா. அவருடன் அவரது இரு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு...
சஞ்சய் யெரவாடா ஜெயிலுக்கு போன பிறகு மான்யா கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டையை அடைத்த சோகம்...
படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த மான்யாவிற்கு, ஒரு கட்டத்திற்கு மேல் துக்கத்தை அடக்க முடியவில்லையாம். கணவரின் காட்சிகளைப் பார்த்து கதறி அழ ஆரம்பித்து விட்டாராம் மான்யா.

குழந்தைகளுக்காக...
ஏற்கனவே படப்பிடிப்பில் அப்பாவுடன் குழந்தைகளும் கலந்து கொண்டதால், ‘இந்த ஸ்பெஷல் ஸ்கிரீனிங் அவர்களுக்காகத் தான்' என மான்யா தெரிவித்துள்ளார்.

ரைட் டூ சஞ்சய்...
இப்படத்திற்காக ‘ரைட் டூ சஞ்சய்' என ரசிகர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஜெயிலில் உள்ள சஞ்சய் தத்திடம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலில் ஸ்கிரீனிங்...
மேலும், இப்படத்தை சிறையில் உள்ள சக கைதிகளுடன் சஞ்சயும் அமர்ந்து பார்க்கும் வகையில் ஒரு ஸ்கீரினிங் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











