மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம்... கீர்த்தி சுரேஷின் வைரல் போட்டோஸ் !
சென்னை : மோகன்லாலின் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்திற்கு கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்
மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை
இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படம் டிசம்பர் 2ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தேசிய விருது
சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரைக்காயர் படம் குவிந்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகி உள்ளது.

வீணையுடன்
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கேரள பாரம்பரிய உடையில் , அழகான கொண்டையுடன் வீணை வாசித்தபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அழகுகாக
மொழு மொழு என்று ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கிறங்க வைக்கும் பார்வையில் ஒரு லுக்கு விட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

அழகு பதுமையாக
தலைநிறைய மல்லிகைப்பூ, நெற்றி நிறைய குங்குமாமிட்டு அழகு பதுமையாக ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











