மோகன்லாலின் பிரமாண்ட படம்.. 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' ரிலீஸ் தள்ளி வைப்பு.. இதுதான் காரணம்!
சென்னை: நடிகர் மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.
16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

மஞ்சு வாரியர்
இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

அரபிக்கடலின் சிங்கம்
தமிழ், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில், 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற பெயர் வைத்துள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதுபற்றி அவர், 'சிறைச்சாலை படத்துக்குப் பிறகு மீண்டும் பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

போர்க் காட்சிகள்
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டிரைலர் வெளியாகியுள்ளது. கடலும் கப்பலும் போர்க்காட்சிகளும் என மிரட்டிய டிரைலரைப் பார்த்த பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் மோகன்லாலைப் பாராட்டி இருந்தார்.

ரிலீஸ் தள்ளிவைப்பு
இந்தப் படம் இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவத் தொடங்கி இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் நேற்று முதல் வரும் 31 தேதி வரை தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதனால் மரைக்காயர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











