மோகன் லால் கர்ஜனை.. கீர்த்தி சுரேஷ் அழகு.. அர்ஜுன் ஆக்ஷன்.. தெறிக்கும் மரைக்காயர் டிரைலர்!
சென்னை: இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மோகன் லால் உடன் காப்பான் படத்தில் நடித்த சூர்யா, இந்த படத்தின் தமிழ் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மோகன் லால், அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்தி டிரைலரை நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். மலையாள வெர்ஷனை மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கம்மி பட்ஜெட்டில் தரமான படங்களை குவித்து வரும் மலையாள சினிமா உலகில், அதிக பட்ஜெட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் மோகன் லால், இந்த படத்தையும், உலகளவில் கொண்டு சேர்த்து, மலையாள திரையுலகின் மார்க்கெட்டை உயர்த்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடல், கப்பல் என பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் திரைப்படம் வரும் மார்ச் 26ம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











