”கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” வெட்கப்பட்ட நடிகர்!
Recommended Video

சென்னை: இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கதாநாயகன் துருவா, நடிகர் மனோபாலா, இயக்குனர் ராகேஷ், இசையமைப்பாளர் அச்சு, தயாரிப்பாளர்கள் வி.மதியழகன், ஏ.ரம்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் துருவா ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி சக்கரவர்த்தி என பலர் நடித்துள்ளனர்.

ராகேஷ்
படத்தின் இயக்குனர் ராகேஷ் பேசும்போது, முதல்படம் வெளியிட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கண்கலங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர் செய்தியாவதே இந்த படத்தை எடுக்க தூண்டியதாக ராகேஷ் தெரிவித்தார்.

பிரச்சனை
கவிஞர் குணா பேசும்போது, சென்சாரில் ஒரு காட்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் எனவும், எடுத்துக்காட்டாக, மொபைலில் பேசிக்கொண்டே விபத்தில் சிக்குவீர்கள் என்ற செய்தியைச் சொல்லும் நோக்கில் காட்சி அமைத்தால் ரத்தம் சிவப்பாக இருக்கிறது பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். சென்சாரில் இருப்பவர்கள் பாலுமகேந்திராவோ, பாலச்சந்தரோ அல்ல. சினிமாவை புரிந்துகொண்டவர்கள் சென்சாரில் இருக்க வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, சமூக பிரச்சனையை பேசும் இப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்கே மறைந்திருந்து பார்க்க வைத்து விட்டார்கள். இருட்டறையில் முரட்டுக் குத்து படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால் எங்கள் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்தார்கள் என்றார்.

ஐஸ்வர்யா
படத்தின் கதாநாயகன் துருவா, ஹீரோயின் இல்லாமல் நடக்கும் சினிமா பங்ஷன் இதுவாகத்தான் இருக்கும். ஹீரோயினெல்லாம் கூப்பிட்ட உடன் வரும் இடத்திலா இருக்கிறார்கள். ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸில் இருக்கிறார். மற்றொரு நாயகி அஞ்சனா பிரேம் ஜப்பானில் இருக்கிறார் என்று வருத்தப்பட்டார்.

கிண்டல்
இந்த படத்தில் செயின் அறுக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பதாகவும், படம் வெளியான பிறகு செயின் அறுக்க என்னைதான் கூப்பிடுவார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார். எக்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜூலை 27 ஆம் தேதி படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











