மாஸ்டர் நடிகையின் ‘மறையாத கண்ணீர் இல்லை’ டீசர் ரிலீஸ்.. வெளியிட்டது யார் தெரியுமா?
சென்னை: 96 படத்தில் குட்டி ஜானுவாக கலக்கிய நடிகை கெளரி கிஷனின் மியூசிக் வீடியோ டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
ரெட் அண்ட் ஒயிட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த மியூசிக் வீடியோவை தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் இணைந்து இயக்கி உள்ளனர்.
பிரேமம், கொடி பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது 'மறையாத கண்ணீர் இல்லை' பாடல் டீசரை ரிலீஸ் செய்துள்ளார்.

குட்டி ஜானு
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான காதல் காவியமான 96 படத்தில் இளம் வயது ஜானுவாக நடித்து ரசிகர்கள் மனங்களை கவர்ந்தவர் நடிகை கெளரி கிஷன். தெலுங்கில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜானு படத்திலும் இவர் தான் குட்டி ஜானு.

மாஸ்டர் படத்தில்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து உள்ளார் கெளரி கிஷன். மற்ற முன்னணி நடிகர்களை போல கெளரி கிஷனுக்கும் மாஸ்டர் படத்தில் சிறப்பான ரோல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தின் ரிலீசுக்காக அவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

கர்ணன் படத்தில்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் கெளரி கிஷன், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தை போலவே கர்ணன் பட ரிலீசுக்காகவும் காத்திருக்கும் இவர், சில குறும்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் நடித்து வருகிறார்.

மறையாத கண்ணீர் இல்லை
ரெட் ஒயிட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை கெளரி கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள இசை ஆல்பம் மறையாத கண்ணீர் இல்லை. இயக்குநர்கள் தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் எஸ்.வி இணைந்து இந்த இசை ஆல்பத்தை இயக்கி உள்ளனர். விஷ்ணு எடவன் வரிகளில் ஜென் மார்ட்டின் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

டீசரை வெளியிட்ட அனுபமா
பிரேமம், கொடி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன் கெளரி கிஷனின் ‘மறையாத கண்ணீர் இல்லை' பாடல் வீடியோவின் டீசரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 40 நொடிகள் ஓடக் கூடிய இந்த டீசரில், சுடிதாரிலும், சேலையிலும் அவ்வளவு அழகாக இருக்கிறார் கெளரி கிஷன்.


Click it and Unblock the Notifications











