மோகன்லால் மாலுமியாக மிரட்டும் மரைக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹாம் - மார்ச் ரிலீஸ்

சென்னை: 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படைத் தலைவர்களை குஞ்சலி மரைக்கார் என்றழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சலி மரைக்கார் வீரம் மிக்கவராக இருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் தான் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம். மோகன்லால் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மோகன்லால் ப்ரியதர்சன் இனையும் படம் தான் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம். மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். அதே போல் தனக்கென தனி அந்தஸ்தை வைத்து கொண்டவர் தான் ப்ரியதர்ஷன்.

Marakkar:Arabikadalinte Simham will be released on 2020 March 19

1979ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மிகச்சிறந்த படங்களை தந்து வருகிறார் ப்ரியதர்ஷன். இவர் சமீபத்தில் உதயநிதியை வைத்து நிமிர் எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளிவந்த மஹேஷிண்டே ப்ரதிகாரம் படத்தின் ரீமேக்காகும்.

அதற்கு பிறகு தமிழில் சில நேரங்களில் எனும் படத்தை இயக்கி இருந்தார். இது திரையங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் செய்யபட்டது. இதற்குப் பின்பு ப்ரியதர்ஷன் மோகன்லால் இணையப்போகும் படம் தான் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம் திரைப்படம், 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படைத் தலைவர்களைப் பற்றியதாகும். அந்த காலத்தில் கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படைத் தலைவர்களை குஞ்சலி மரைக்கார் என்றழைக்கப்பட்டனர்.

அவர்களில் நான்காவதாக தோன்றிய குஞ்சலி மரைக்கார் மிகவும் வீரம் மிக்கவராக விளங்கினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் தான் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம்.

மோகன்லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் லூசிஃபர். அவர் இத்திரைப்படத்திற்கு பிறகு தற்போது மரைக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹாம் படத்தில் நடித்து வருகிறார். தற்போது மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தின் ரீலிஸ் தேதி உட்பட ஒரு போஸ்டரை வெளியிட்டு உள்ளார்.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தில் மோகன்லால் வித்யாசமான ரோலில் நடித்து வருவதாகவும் இது வரை அவர் நடித்த படங்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டிருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X