மோகன்லாலின் ‘மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்‘.. வெளியானது மிரட்டலான டீசர் !
கேரளா: மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படம் டிசம்பர் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்
மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் .மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், சுஹாசினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

வாழ்க்கை வரலாறு
இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படம் டிசம்பர் 2ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தமிழக வெளியீடு
'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தை வி கிரியேஷன் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இதற்கு முன் மோகன்லால் மற்றும் பிரபு நடித்த சிறைச்சாலை படத்தையும் தமிழகத்தில் தாணுவே வெளியிட்டு இருந்தார். 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் ,பிரபுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

தேசிய விருது
சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை மரைக்காயர் படம் குவித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகி உள்ளது.
டீசர்
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில்,மும்முரமாக போர் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்த கடலும் நெருப்பு குழம்பாக மாறி உள்ளன. இந்த டீசர் வெளியான சில மணி நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











