மரக்கார் படத்திலிருந்து கலக்கல் வீடியோ பாடலை வெளியிட்ட மோகன்லால்

திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மரக்கார்.

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் மோகன்லால்.

மரக்கார் படம்

மரக்கார் படம்

நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், பிரபு, அர்ஜுன், பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 2ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மரக்கார்.

பிரம்மாண்டமான படம்

பிரம்மாண்டமான படம்

வரலாற்றுப் பின்புலத்தில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த படம் கடந்த 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

வரவேற்ப்பை பெற்ற மோகன்லால் நடிப்பு

வரவேற்ப்பை பெற்ற மோகன்லால் நடிப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்தப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் மோகன்லாலின் நடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸுக்கு முன்னதாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றன.

சிறப்பான பிரணவ் மற்றும் கல்யாணி

சிறப்பான பிரணவ் மற்றும் கல்யாணி

படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தன. பிரணவ் மற்றும் கல்யாணி இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தாலும் அவர்கள் சிறப்பான கேரக்டரில் நடித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் வீடியோ பாடல்

படத்தின் வீடியோ பாடல்

இந்நிலையில் தற்போது படத்தின் வீடியோ பாடல் ஒன்றை நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலில் பிரணவ் மற்றும் கல்யாணி சிறப்பாக நடித்துள்ளனர். இருவரும் இந்த பாடல் குறித்து கனவு காண்கின்றனர். அழகான உடையில் அவர்கள் இருவரும் இந்த பாடலில் ஆடியுள்ளனர்.

ரொமான்டிக் பாடல்

ரொமான்டிக் பாடல்

மிகவும் அழகாக அதே சமயம் ரொமான்டிக்காக இந்த பாடல் அமைந்துள்ளது. இளம் காதலர்களாக பிரணவ் மற்றும் கல்யாணி இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அழுத்தமான கேரக்டர்கள்

அழுத்தமான கேரக்டர்கள்

படத்தில் மோகன்லால் உள்ளிட்டவர்களுக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் படத்தை சில இடங்களில் கலர்ஃபுல்லாக்க ப்ரணவ் மற்றும் கல்யாணி உதவியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X