Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாறன் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் குமார்!
சென்னை: ஒவ்வொரு படத்திலும் பார்க்கும் அனைவரையும் மிரட்டி வருகிறார் நடிகர் தனுஷ்
தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த தனுஷ் இப்பொழுது தெலுங்கு சினிமாவிலும் கால் தடத்தை பதித்து வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் குமார் தற்போது வெளியிட்டுள்ளார்
கல்லூரி
மாணவனாக
அதகளப்படுத்தும்
தனுஷ்…
வாத்தி
வேறலெவல்
அப்டேட்
!

சர்வதேச அளவில் பல விருதுகள்
நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைவரையும் ரசிக்க வைத்தது வருகிறது. மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சர்வதேச அளவிலும் பல விருதுகளை குவித்து வருகிறது . அந்த வகையில் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் இன்றளவும் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது

கார்த்திக் நரேன்
இவ்வாறு தனுஷின் ஒவ்வொரு படமும் அனைவரையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க இப்போது இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுடன் கூட்டணி அமைத்துள்ளார். துருவங்கள் பதினாறு, மாபியா, நரகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் த்ரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவர். மலையாள படங்களுக்கு இணையாக மிக சாதாரண கதை களத்தை எடுத்துக் கொண்டு அதில் திரில்லரை புகுத்தி ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் திறமை வாய்ந்த கார்த்திக் நரேன் மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷ் பத்திரிக்கையாளராக
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சமுத்திரகனியின்,ஸ்ம்ருதி வெங்கட், சரண்யா பொன்வண்ணன் என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனுஷ் இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளாராம். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக செம ஸ்டைலிஷாக உருவாகி வருகிறது.

ஓபனிங் சாங்
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்க படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ்குமார் அறிவித்துள்ளார். மாறன் படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த பாடல் ஓபனிங் சாங்காக அமைந்துள்ளது. கவிஞர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார், தெருக்குரல் அறிவு இப்பாடலில் ராப் பாடியுள்ளார். என அட்டகாசமான அப்டேட்டை ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது