மரண மாஸ்: அந்த பழம் தான் இந்த பழமா அனிருத்? #MaranaMass
Recommended Video

சென்னை: மரண மாஸ் பாடல் டியூனை கேட்டு இது எங்கேயோ கேட்டது போன்று இருக்கே என்று பலருக்கும் தோன்றுகிறது.
பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை வெளியானது. பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளது நன்றாக உள்ளது.
இருப்பினும் ரொம்ப எதிர்பார்த்ததாலோ என்னவோ திருப்தியடைய முடியவில்லை.

எஸ்.பி.பி.
அனிருத் தனது தலைவருக்காக மரண மாஸ் இல்லை அதை விட மரண மாஸாக டியூன் போடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு இருந்ததால் மரண மாஸ் பாடல் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. மேலும் எஸ்.பி.பி.யை ஓரிரு வரியை மட்டும் பாட வைத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
எங்கேயோ கேட்டது
மரண மாஸ் டியூனை கேட்டால் கால்கள் தானாக ஆடத் துவங்கினாலும் இதை எங்கேயோ கேட்டது போன்று இருக்கிறதே என்று தோன்றியது. அந்த நேரம் தான் இந்த வீடியோ கண்ணில் பட்டது அனிருத்.

அனிருத்
என்ன அனிருத் இது?. உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இன்ஸ்பையராகிவிட்டீர்களா?. இது போக ரஜினியின் பழைய படத்தில் வேறு இதே டியூன் இருக்கிறது பாஸ்.

ஓபனிங் சாங்
ரஜினிக்கு பல படங்களில் ஓபனிங் பாடல் பாடிய மாமனிதர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அவரை இப்படி பெயருக்கு பாட வைப்பதா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











