வெளியானது மரண மாஸ் வீடியோ: ஆனால்...
Recommended Video

வெளியானது பேட்ட மரண மாஸ் வீடியோ
சென்னை: பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுத்தீன் சித்திக்கி உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
அறிவித்தபடி லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. அனிருத் இசை மரண மாஸாகத் தான் உள்ளது. மாரிக்கு போட்டது போன்றே பேட்டக்கும் மாஸாக ட்யூன் போட்டுக் கொடுத்துள்ளார் அனிருத்.
முன்னதாக மாலை 5.30 மணிக்கே மரண மாஸ் லிரிக்கல் வீடியோ சன்நெக்ஸ்ட் ஆப்பில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் யூ டியூப் வீடியோவை வெளியிடும் முன்பு தமிழ் ராக்கர்ஸ் அதை வெளியிட்டுவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications