ஆஹா.. ட்யூனே இப்படி போட்டுத் தாக்குதே.. ரஜினியின் பேட்ட மேக்கிங் வீடியோ.. வைரலாகிறது

பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

பேட்ட மரண மாஸ் பாடல்.. அனிருத் இசையில் SPB பாடியது- வீடியோ

சென்னை: பேட்ட படத்தின் முதல் பாடலான மரண மாஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அப்பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

ரஜினியின் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Marana Mass making video

அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான மரண மாஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பாடல் உருவாகும் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் தாரை தப்பட்டைகள் முழங்க, அனிருத் இசையமைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சில வினாடிகளே என்றாலும், அந்த தாரை தப்பட்டைகளின் ஒலி காதை கிழிக்கின்றன. உண்மையிலேயே மரண மாஸ் பாடல் செம மாஸாக தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'ஐயம் வெயிட்டிங்' என்ற மனநிலையில், மாலை 6 மணி எப்போது வரும் ரஜினி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X