twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: நீங்க 'தட்லாட்டம்' ஆடி இருக்கீங்களா?

    தட்லாட்டம் என்பதன் பொருள் தெரிய வந்துள்ளது.

    |

    Recommended Video

    பேட்ட மரணமாஸ் தட்லாட்டம்-னா என்ன தெரியுமா?- வீடியோ

    சென்னை: பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரணமாஸ் பாடலின் ஆரம்பத்தில் வரும் தட்லாட்டம் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிய வந்துள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் முதல் பாடல் நேற்று மாலை வெளியானது. படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலான இதனை எஸ்.பி.பி. பாடி இருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.

    Marana mass song: What is Thatlaatam?

    இப்பாடலின் ஆரம்பத்தில், 'தட்லாட்டம் தாங்க.. தர்லாங்க சாங்க..' என வருகிறது. ஏற்கனவே சர்கார் படப்பாடலில் சிம்டாங்காரன் என்ற வார்த்தையை வைத்து பலரையும் குழப்பியவர் விவேக். பேட்ட படத்தில் தட்லாட்டம் என்றால் என்ன என்ற புதிய நெருப்பைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

    தட்லாட்டம் என்பது வடசென்னை ஆட்களைத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயம் புதிய வார்த்தையாகத் தான் இருக்கும். இதனால் அப்படி என்றால் என்ன என்பது நேற்று மாலை முதல் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. நாமும் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் எனத் தேடினோம்.

    Marana mass song: What is Thatlaatam?

    கவிஞர் விவேக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்திக்கும் பதிலில்லை. இதனால், எப்படியும் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வது என்ற ஆவேசத்தில், மேலும் பல சோர்ஸ்களில் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தேடினோம்.

    அப்படியாக பழைய வண்ணாரப்பேட்டை பட இயக்குநர் மோகனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், "தட்லாட்டம் என்பது கையில் கிடைக்கும் பொருட்களை அல்லது கருவிகளை வைத்து தாளம் போட்டு, அந்த இசைக்கேற்ப நடனம் ஆடுவது தான் தட்லாட்டம். உதாரணமாக தட்டு, அலுமினிய அன்னக்கூடை, காலி பிளாஸ்டிக் குடம், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வைத்து தாளம் உருவாக்கிவது ஆகும்.

    அவ்வாறு உருவாகும் தாளத்திற்கு ஏற்ப வாயில் கிடைத்த வார்த்தைகளைக் கோர்வையாக்கி பாடலாக்குவது ஒரு ஸ்டைல். இதுவும் கிட்டத்தட்ட கானாப் பாடலைப் போன்றது தான். கானாப் பாடலுக்கு ஒரு கான்செப்ட் இருக்கும். இதற்கு அப்படி எதுவும் கிடையாது. இது ஒரு வகை பரிபாஷை.

    தட்லாடுறா என்று இதனைக் கூறுவார்கள். வடசென்னை கடற்கரையோரப் பகுதிகளில் இது போன்ற கச்சேரிகளை அதிகளவில் பார்க்கலாம். சந்தோஷமான தருணங்களில் இது போன்று தட்லாட்டம் ஆடுவார்கள்" என இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

    English summary
    Thatlattam the word used in Petta marana mass song means, creating music with the things in hand.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X