»   »  கடைசியில் ரஜினி தலையிலேயே கை வைத்த விஜய் சேதுபதி!

கடைசியில் ரஜினி தலையிலேயே கை வைத்த விஜய் சேதுபதி!

Subscribe to Oneindia Tamil
ரஜினி, கமல் தலையிலே கை வைத்த விஜய் சேதுபதி - வைரல் வீடியோ

சென்னை: பேட்ட படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ரஜினியின் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வரும் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ்:

கார்த்திக் சுப்புராஜ்:

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மரணமாஸ் தலைகுத்து என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடல் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்காகியுள்ளது.

புதிய போஸ்டர்:

புதிய போஸ்டர்:

இந்நிலையில் பேட்ட படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி ரஜினி தலையிலும், நாடியிலும் என இரண்டு துப்பாக்கிகளை வைத்திருப்பது போல் இருக்கிறது.

ரஜினியின் வில்லன்:

ரஜினியின் வில்லன்:

ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. ரஜினி மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த போஸ்டரை தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

ரசிகர்கள் மகிழ்ச்சி:

கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசான 2.0 படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்நிலையில் பொங்கலுக்கு பேட்ட ரிலீசாகிறது. அடுத்தடுத்து ரஜினி படங்கள் வெளியாவதால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The Sun pictures have announced that the Petta first single will be released on Monday December 3rd and released a 2nd look poster of the movie.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more