17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது

By Siva

Recommended Video

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது | Actor Mandar Kulkarni

மும்பை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மராத்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மராத்தி நடிகரும், இயக்குநருமானவர் மந்தர் குல்கர்னி(24). நாடக ஒர்க்ஷாப்புகளும் நடத்தி வருகிறார். அத்தகைய ஒர்க்ஷாப் ஒன்றுக்கு 17 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார்.

Marathi actor held for sexually harassing a minor girl

கடந்த 16ம் தேதி குல்கர்னி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார். உன்னை என் நாடகத்தில் நடிக்க வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில உடைகளை கொடுத்து அந்த சிறுமியை அணிந்து வரச் செய்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

பின்னர் பிகினியை கொடுத்து அணியுமாறு கூற சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்கு குல்கர்னி சில பெண்களின் புகைப்படங்களை காட்டி பார், அவர்கள் எல்லாம் பிகினி அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி பிகினி அணிந்து வர குல்கர்னி அவரை புகைப்படம் எடுத்துள்ளார். போட்டோஷூட் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற சிறுமி குல்கர்னி நடந்து கொண்ட விதத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அந்த சிறுமியின் தாய் டெக்கன் காவல் நிலையத்தில் குல்கர்னி மீது புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புனே போலீசார் கடந்த 23ம் தேதி குல்கர்னியை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்தனர்.

குல்கர்னியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X