ப்பா.. அச்சு அசல் அப்படியே இருக்காங்களே.. ஐஸ்வர்யா ராயின் இன்னுமொரு கார்பன் காப்பி.. யார் இவங்க?!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராய் போன்றே அச்சு அசலாக உள்ள மராத்தி நடிகையின் போட்டோ வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். அதனை தொடர்ந்து நடிக்க தொடங்கிய அவர், தனது சினிமா கேரியரை தமிழ் சினிமாவில் இருந்துதான் தொடங்கினார்.

மணி ரத்னத்தின் இருவர் படத்தில் தொடங்கியது அவரது சினிமா வாழ்க்கை. அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

தொடர்ந்து ஜீன்ஸ், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் எந்திரன் என்ற படத்தில் நடித்தார். 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.

கொஞ்சமும் குறையல

கொஞ்சமும் குறையல

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். ஹைட், வெயிட், கண்கள், உதடு என அனைத்தும் செஞ்சு வைத்த சிலைப் போல் இருப்பார் ஐஸ்வர்யா ராய். ஒரு குழந்தைக்கு தாயான போதும் கூட கொஞ்சமும் அழகு குறையாமல் கிறங்கடித்து வருகிறார்.

மஹ்லகா ஜாபேரி

மஹ்லகா ஜாபேரி

எத்தனை அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய்க்கு ஈடாகுமா என்று இன்றும் சிலாகித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயை போன்றே இருக்கிறார் என அண்மையில் ஈரான் நாட்டு மாடல் அழகி ஒருவர் வைரலானார். ஈரான் நாட்டு மாடலான மஹ்லகா ஜாபேரி அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் இருந்து முன்னணி நிறுவனங்களின விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

டிக்டாக் வீடியோ

டிக்டாக் வீடியோ

இந்நிலையில் தற்போது மாராத்தி நடிகை ஒருவர் ஐஸ்வர்யா ராயின் கார்பன் காப்பி போன்று இருப்பது தெரியவந்துள்ளது. மானசி நாயக் என பெயர் கொண்ட அந்த நடிகை டிக்டாக்கில் பிரபலமானவர். இந்நிலையில் ஜோதா அக்பர் படத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராயை போன்று டிக்டாக் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மராத்தி நடிகை

அதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராயை போன்றே இருக்கிறார் என கூறியுள்ளனர். மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் ஷேர் செய்திருக்கும் படங்கள் அனைத்திலும் ஐஸ்வர்யா ராயை போன்றே உள்ளார். அவரது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X