பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்!

மும்பை: மகாராஷ்டிராவில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயதே ஆன பிரபல நடிகை மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை பூஜா ஸுஞ்சர். 25 வயதான இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக தனது சொந்த ஊரான ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கோரோகன் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்தப் பகுதி மும்பையிலிருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நடிகைக்கு பிரசவ வலி

நடிகைக்கு பிரசவ வலி

இந்நிலையில் திங்கள் கிழமை அதிகாலை 2 மணிக்கு பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

சில நிமிடங்களில் மரணம்

சில நிமிடங்களில் மரணம்

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. இதனை தொடர்ந்து பூஜாவின் உடல் நிலையும் மோசமடைந்தது.

ஆம்புலன்ஸ் தேடல்

ஆம்புலன்ஸ் தேடல்

இதனையறிந்த மருத்துவர்கள் பூஜாவை உடனடியாக 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹிங்கோலி சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் பதற்றமடைந்த பூஜாவின் குடும்பத்தினர் அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸை தேடினர்.

செல்லும் வழியில் மரணம்

செல்லும் வழியில் மரணம்

ஆனால் அவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று கிடைத்தது. இதையடுத்து சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பூஜா. ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே காலை 6.30 மணிக்கு நடிகை பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பமானதால் ஓய்வு

கர்ப்பமானதால் ஓய்வு

பூஜா ஸுஞ்சர் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்த காரணத்தினால் படத்தில் நடிக்காமல் பிரேக் எடுத்திருந்தார்.

திரையுலகம் அதிர்ச்சி

திரையுலகம் அதிர்ச்சி

இந்நிலையில் குழந்தையும் இறந்து தானும் இறந்து மகப்பேறுக்காக எடுத்த தற்காலிக ஓய்வு அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. பூஜாவின் திடீர் மரணத்தால் மராத்தி திரையுலம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஆம்புலன்ஸ் தாமதம்

ஆம்புலன்ஸ் தாமதம்

ஆம்புலன்ஸ் தாமதமே பூஜாவின் மரணத்திற்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆம்புலன்ஸ் விரைவாக கிடைத்திருந்தால் தாயை மட்டுமாவது காப்பாற்றியிருக்கலாம் என பூஜாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X