twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த நிஜ போலீஸ்.. போட்டியாளரைக் கைது செய்ததால் பரபரப்பு!

    மராட்டி பிக் பாஸ் போட்டியாளரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    |

    குர்கான்: பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து போட்டியாளர் ஒருவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அளவில் அதிக மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இது தமிழில் மட்டுமின்றி இந்தி, மராட்டி,தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

    தமிழில் நாளை பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பமாக இருக்கிறது. மராட்டியில் இம்மாத துவக்கத்தில் பிக் பாஸ் சீசன் 2 ஆரம்பமானது. இதில், அபிஜித் பிச்சுகலே என்பவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

    செக் மோசடி:

    செக் மோசடி:

    முனிசிபாலிட்டி தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை எல்லா தேர்தல்களிலும் கலந்து கொள்பவர் என்ற பேரைப் பெற்றவர் அபிஜித். ஆனால் ஒரு தேர்தலில் கூட இதுவரை அவர் ஜெயித்ததில்லை. ஆனால், 2014ம் ஆண்டு முதல் இவர் மீது செக் மோசடி வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    அபிஜித் கைது:

    அபிஜித் கைது:

    அந்தவகையில், அரசியல்வாதி ஒருவர் அபிஜித் பிச்சுகலே மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைப் போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அபிஜித்துவை அவர்கள் கைது செய்தனர்.

    போட்டியாளர்கள் அதிர்ச்சி:

    போட்டியாளர்கள் அதிர்ச்சி:

    ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் அபிஜித் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செட்டிற்குள் புகுந்து சக போட்டியாளரை போலீசார் கைது செய்ததால், மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பரபரப்பு:

    பரபரப்பு:

    வெளியுலகத் தொடர்பே இல்லாமல் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது தான், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த சூழ்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போலீசார் போட்டியாளர் ஒருவரைக் கைது செய்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    மராட்டியில் இம்மாத துவக்கத்தில் பிக் பாஸ் சீசன் 2 ஆரம்பமானது. இதில், அபிஜித் பிச்சுகலே என்பவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் மீது செக் மோசடி வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்தவகையில், அரசியல்வாதி ஒருவர் அபிஜித் பிச்சுகலே மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைப் போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அபிஜித்துவை அவர்கள் கைது செய்தனர்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X