ஜீவா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் மூவரில் வெற்றிவாகை சூடப்போவது யார்?

By Manjula

சென்னை: இன்று போக்கிரி ராஜா, பிச்சைக்காரன், சவுகார்பேட்டை என்று 3 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் சவுகார்பேட்டை, ஜீவா, ஹன்சிகா நடிப்பில் போக்கிரிராஜா மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியிருக்கும் 3 படங்களின் பலம், பலவீனம் குறித்து இங்கே காணலாம்.

சவுகார்பேட்டை

சவுகார்பேட்டை

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, மனோபாலா, சுமன், சரவணன், சிங்கம்புலி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சவுகார்பேட்டை. தம்பி வெட்டோத்தி சுந்தரம் புகழ் வடிவுடையான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். உண்மையான காதல் ஜெயிக்கும். அனைத்திலும் உயர்ந்தது கடவுள் சக்தி என்பதுதான் படத்தின் கதை.ஸ்ரீகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட்டை அவருக்கு மீட்டுத் தருமா? என்று பார்க்கலாம்.

போக்கிரி ராஜா

போக்கிரி ராஜா

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜீவா

ஜீவா

ஜீவாவின் 25 வது படம் என்ற பெருமையுடன் போக்கிரி ராஜா வெளியாகியிருக்கிறது. சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஜீவாவின் மார்க்கெட் ஏகத்திற்கும் சரிந்து கிடக்கிறது. இழந்த மார்க்கெட்டை மீட்கும் முயற்சியில் போக்கிரி ராஜாவைக் களமிறக்கியிருக்கும் ஜீவா அதில் வெற்றி பெறுவாரா?

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

நான், சலீம், இந்தியா-பாகிஸ்தான் என்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி இன்று பிச்சைக்காரனாக களமிறங்கியிருக்கிறார். சசி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பிச்சைக்காரன் படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே தயாரித்து இருக்கிறார். நடிகர், இசையமைப்பாளர் என்று வெற்றிக்கொடி நாட்டிய விஜய் ஆண்டனி தயாரிப்பிலும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா? என்பது ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது.

பேய், பிச்சைக்காரன், காமெடி மூன்றில் வெற்றியைத் தட்டிச்செல்வது யார்? என்பது இன்று தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X