இது மார்ச் மாசம் இல்லை.. மாஸ்டர் அப்டேட் மாசம்.. சொன்னது யார் தெரியுமா?
சென்னை: மார்ச் மாதம் முழுவதும் மாஸ்டர் படத்தின் அப்டேட் மாசமாக இருக்கும் என ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ் பி க்ரியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்டேட் மாசம்
மேலும், தளபதி விஜய்க்கு, விஜய்சேதுபதி கொடுத்த முத்த போட்டோவையும் போட்டு, ஒட்டுமொத்த ட்விட்டரையும் தளபதி ரசிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த மார்ச் மாதம் முழுவதும் மாஸ்டர் படத்தின் அப்டேட் மாசமாக இருக்கும் என ரத்னகுமார் ட்வீட் போட்டு ரசிகர்களை மேலும், உற்சாகப்படுத்தி வருகிறார்.
அடுத்த மாசமா?
அடுத்த மாசமா, வாயில அடிங்க.. நாளையில இருந்துன்னு சொல்லுங்க.. என் தெய்வமே என மாஸ்டர் படத்தின் அப்டேட் கிங் ரத்னகுமார் மற்றும் ஷாந்தனுவை டேக் செய்து இந்த ரசிகர் இப்படி ஒரு மீம் போட்டுள்ளார். அடுத்த அப்டேட்டாக மாஸ்டர் செகண்ட் சிங்கிள் தான் வரும் என தெரிகிறது.
மாஸ்டர் மாசம்
இயக்குநர் ரத்னகுமாரின் ட்வீட் வந்தாலே, தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாகி விடுகிறது. நேற்று, சாந்தனுவிடம் காலையிலேயே ரகளை ஆரம்பிக்க, வெயிட்டா அப்டேட் வரப் போகுது என ரசிகர்கள் எண்ணிய படியே, நேற்று இரவு மாஸ்டர் ஷூட்டிங் நிறைவு என்ற அப்டேட் வந்தது. இது மார்ச் மாசம் இல்லை, மாஸ்டர் அப்டேட் மாசம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அர்ச்சனா ஏமாத்திட்டாங்க
இப்படி தான் பிகில் ப்ரோ, அர்ச்சனா கல்பாத்தி, செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் அப்டேட்டுன்னு சொன்னாங்க.. ஆனால், ஒண்ணு, ரெண்டு அப்டேட் மட்டுமே விட்டாங்க.. நீங்களும் அப்படி தானா? என ரசிகர் ஒருவர் கேட்க, அதையெல்லாம் என் ஞாபகம் படுத்துறீங்க, மனசு எல்லாம் ஒரே புண்ணா இருக்கு என மற்றொரு ரசிகர் ஃபீல் பண்ணி உள்ளார்.
இன்னொரு டிரெண்டிங்
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக நேற்று அறிவித்து, விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி முத்தம் இட்ட புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டு டிரெண்ட் செய்தனர். தற்போது, விஜய் ஃபேன்ஸ் டிரெண்ட் திரும்பவும் வந்துடுச்சு என #VFTisBack! என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னைக்கு இருக்கா?
மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு, மார்ச் 1ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர். மார்ச் மாதம் முழுவதும் மாஸ்டர் அப்டேட் மாசம் என இயக்குநர் ரத்னகுமார் போட்ட ட்வீட்டை தொடர்ந்து, நிச்சயம் இன்னைக்கும் வெயிட்டான அப்டேட் வரும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











