Marco vs Barroz Box Office: பாக்ஸ் ஆபீஸில் மண்ணைக் கவ்விய மோகன்லால் படம்.. அதிரடி காட்டும் மார்கோ!
திருவனந்தபுரம்: கடந்த வாரம் டிசம்பர் 20ம் தேதி வெளியான உன்னி முகுந்தனின் மார்கோ திரைப்படம் தியேட்டர்களை தெறிக்கவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான மோகன்லாலின் பரோஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்வியுள்ளது.
இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கே பொன்னான காலமாக உள்ள நிலையில், மோகன்லால் படங்கள் மட்டும் மக்களை கவரமுடியாமல் தவித்து வருகிறது. மலைக்கோட்டை வாலிபன் படம் ஃபிளாப்பான நிலையில், தனது இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 3டி படமாக உருவான பரோஸ் திரைப்படம் வெற்றிப் பெறும் என்று நினைத்தார்.
ஆனால், அந்த படம் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமின்றி குழந்தைகளை கூட கவராமல் பாக்ஸ் ஆபிஸில் தவித்து வருகிறது. மோகன்லால் த்ரில்லர் மற்றும் மாஸ் ஜானர் படங்களில் கவனம் செலுத்தினால் தான் ஹிட் கொடுக்க முடியும் என்கின்றனர்.

பரோஸ் பாக்ஸ் ஆபீஸ்: மோகன்லால் இயக்கி நடித்துள்ள ஃபேண்டஸி 3டி திரைப்படமான பரோஸ் படம் முதல் நாளே இந்தியளவில் வெறும் 3.45 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. 2ம் நாளில் 1.6 கோடி ரூபாயும் நேற்று 1.25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதுவரை 3 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6.30 கோடி ரூபாய் மட்டுமே பரோஸ் திரைப்படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோகன்லால் நடித்த இந்த படம் இந்த வாரம் இறுதியில் அதிகபட்சமாக 10 முதல் 15 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மோகன்லாலுக்கு இது பலத்த அடி தான் என்கின்றனர்.

மாஸ் காட்டும் மார்கோ: இந்த ஆண்டு தமிழில் உன்னி முகுந்தன் சூரி நடித்த கருடன் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து ஹிட் அடித்தது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான மார்கோ திரைப்படம் ஆக்ஷன் விரும்பிகளை திருப்திப்படுத்தி இதுவரை 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆவேஷம், மஞ்சுமெல் பாய்ஸ் போல இந்த படமும் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











