இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. மாரி செல்வராஜ், அஜய் ஞானமுத்து, ஆர்யா உள்ளிட்டோர் இரங்கல்

Recommended Video

Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று இரவு நடந்த கிரேன் விபத்தால், 3 பேர் உயிரிழந்தனர், 9பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் இதுவென்றும், இந்த கோர விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களின் இழப்புகளை ஈடு செய்ய முடியாது என்றும் பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ், அஜய் ஞானமுத்து, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்த சம்பவம் குறித்த தங்கள் கருத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் இரங்கல்

பரியேறும் பெருமாள் மற்றும் தனுஷின் கர்ணன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று இந்தியன் 2 படபிடிப்பில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழப்பு செய்தி இன்னும் மனதை நொறுக்குகிறது. இப்பெரும் துயரிலிருந்து எல்லாரும் மீள இயற்கையிடம் மண்டியிடுகிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இரங்கல்

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து, "இந்த செய்தி நெஞ்சை பதறவைக்கிறது. உயிரிழந்தவர்களின், குடும்பங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே, தெரியவில்லை. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்" என ட்வீட் போட்டுள்ளார்.

ஆர்யா இரங்கல்

ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் மற்றும், புரொடக்‌ஷன் அசிஸ்டன்ட் மது ஆகிய மூவர், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நேற்று இரவு கிரேன் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த நடிகர் ஆர்யா, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியா இருக்கு

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நேற்று இரவு நடந்த எதிர்பாராத விபத்தால், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து அறிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. உயிரிழந்த மூவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார்.

இனிமே ஜாக்கிரதை தேவை

ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுபோன்ற விபத்துகளில், பெரும்பாலும் சண்டை கலைஞர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் இனிமேலும், நடைபெறாமல் இருக்க கூடுதல் ஜாக்கிரதை தேவை என்றும், பரிதாபமாக இறந்த உயிர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் நடிகர் கதிர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்பாராத விதமாக நடந்த இந்த கோர விபத்து, மனதை வாட்டுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், நல்ல வேலைக்காரர்களை இழந்த இந்தியன் 2 படக்குழுவுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X