CM விஜய் சார் நீங்க கலக்கிட்டீங்க.. வாழ்த்து செய்தியில் மாரி செல்வராஜ் சொன்னதை கவனிச்சீங்களா?

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை முழுவதுமாக பதவியேற்பு இன்றுடன் அதாவது மே 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது. தவெக சார்பாக 31 அமைச்சர்கள், கூட்டணிக் கட்சிகள் சார்பாக நான்கு அமைச்சர்கள் என தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும் " என்று பதிவிட்டுள்ளார்.

Mari Selvaraj and Pa Ranjith Praise CM Vijay s Inclusive Cabinet Formation

பா. ரஞ்சித்: அதேபோல் இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், " சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

வன்னியரசு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mari Selvaraj and Pa Ranjith Praise CM Vijay s Inclusive Cabinet Formation

பதில்: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துகள். இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு அமைச்சர் வன்னியரசு, " தங்களுடைய ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் தேவை தோழர்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X