காக்கா ராஜா கதையா? மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.. அறிவிப்பு எப்போ?
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் புதிய வீடு கட்டிய மாரி செல்வராஜை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.
இருவரும் இணைந்து படம் பண்ண போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

கதைகளை தேடும் உதயநிதி
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் சந்தானத்துடன் இணைந்து காமெடி படங்களில் நடித்து கலக்கி வந்தார். ஆனால், தற்போது நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படத்தில் பார்வையற்றவராக மிரட்டி இருந்தார்.

நெஞ்சுக்கு நீதி
கனா படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்ட்டிக்கள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நெஞ்சுக்கு நீதி எனும் அட்டகாசமான டைட்டிலில் உருவாகி வரும் அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில்
பரியேறும் பெருமாள், கர்ணன் என அடிதட்டு மக்களின் வலியை சமூக கருத்தோடு கலந்து சொல்லும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாக உள்ள அந்த படத்தின் அறிவிப்பு குறித்த அப்டேட்டை தற்போது மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பு போஸ்டர்
செஸ் போர்ட் ராஜாவுக்கு மேல் காகம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற வித்தியாசமான புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாளை காலை 10 மணிக்கு பெரிய அறிவிப்பு வெளியாகப் போகிறது என்று மட்டுமே மாரி செல்வராஜ் ட்வீட் போட்டுள்ளார். ஏற்கனவே மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து படம் பண்ணப் போகும் தகவல் கசிந்த நிலையில், அந்த படத்தின் அப்டேட் தான் இது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video

காக்கா ராஜா
பரியேறும் பெருமாள் படத்தில் நாய், கர்ணன் படத்தில் குதிரை என விலங்குகளையும் கதைக்குள் கொண்டு வந்து கதை சொல்லி வரும் மாரி செல்வராஜ் தற்போது காகத்தை காட்சிப்படுத்தி இருக்கும் நிலையில், படத்தின் கதை எப்படி இருக்கும் என்கிற யூகங்கள் எழுந்து வருகின்றன. இன்னொரு பக்கம் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் வரும் கதை சொல்லும் பாடலில் காக்கா கதையும் ராஜா கதையும் கலந்து விக்ரம் சொல்ல இது காக்கா கதையா? இல்லை ராஜா கதையா? என சாரா கேட்க, காக்கா ராஜா கதை என சமாளிப்பாரே அதை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











