Maamannan : கையில் அரிவாளுடன் உதயநிதி.. மாமன்னன் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் புது பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்த நிலையில் படம் ஜூன் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

Mari Selvaraj and Udhayanidhi Maamannan first look released

மாமன்னன் : பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை பணிகளை கவனித்து வருகிறார்.

பாசமிகு தந்தையாக வடிவேலு : நகைச்சுவை நடிகரான வடிவேலு இதுவரை ஹீரோக்களுக்கு தந்தையாக நடிக்காத நிலையில், மாமன்னன் படத்தில் முதன்முறையாக படத்தின் நாயகன் உதயநிதிக்கு தந்தையாக வடிவேலு நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த வடிவேலுவை பாசமிகு தந்தையாக புதிய பரிமாணத்தில் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பர்ஸ்ட் லுக் நாளை : இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து கடந்த, செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்ற அறிவிப்புடன் படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது. அதில் உதயநிதி சூட்கோட்டுடன் நிற்க, எதிரில் இருந்தவர் வெள்ளை வேட்டி சண்டையில் இருந்தார்.

Mari Selvaraj and Udhayanidhi Maamannan first look released

கையில்அரிவாளுடன் உதயநிதி : இதையடுத்து, தற்போது படக்குழு மீண்டும் ஒரு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஒரு ஷோபாவில் உதயநிதி கையில் அரிவாளுடன் அக்ரோஷமாக அமர்ந்து இருக்கிறார். அருகில் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கும் ஆசாமி கையில் துப்பாக்கியுடன் அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் பெரும்டிரெண்டாகி வருகிறது. போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

முக்கியமான படம் : மாமன்னன் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும், இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டு போஸ்டர்களும் அதை உறுதி செய்துள்ளதால், நாளை வெளியாக உள்ள பர்ஸ்ட் லுக் இதைவிட தரமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X