Maamannan Politics: மாமன்னன் மக்களுக்கான படமா? உதயநிதிக்கான படமா? விரிவான அரசியல் அலசல் இதோ!

சென்னை: மாமன்னன் படத்தில் 2 முறை எம்எல்ஏவாக இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாமன்னன் வடிவேலு 3வது முறையும் ஆளுங்கட்சியில் இருப்பதாலே வென்றார் என்றும் இந்த படத்தில் எங்கேயும் மக்களுக்கான அரசியலை இயக்குநர் மாரி செல்வராஜ் பேசவே இல்லை என ஏகப்பட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

லீலா (கீர்த்தி சுரேஷ்) இலவச கல்வி நிலையத்தை வைத்து நடத்துவது ரத்தினவேல் (பகத் ஃபாசில்) அண்ணன் சுந்தரம் (சுனில்) நடத்தும் கட்டண கல்வி நிறுவனத்துக்கு பிரச்சனை வருவதால் இந்த படத்தில் பிரச்சனை வெடிக்கிறது.

காதலியின் பிரச்சனை அதிவீரன் (உதயநிதி) சொந்த இடத்தில் நடப்பதால் அவர் பிரச்சனையாக மாறி, பின்னர் அவருடைய எம்எல்ஏ அப்பாவுக்கும் ரத்தின வேலுக்கும் உண்டான பிரச்சனையாக மாறுகிறது.

Mari Selvaraj and Udhayanidhi Stalins Maamannan movie hidden politics analysis

மக்களுக்கான படமா: இதில், எங்கேயும் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், அந்த மக்களுக்காக இவர் அரசியலில் வெல்ல வேண்டும் என்றோ, அதற்காக உதயநிதியும் வடிவேலுவும் போராடுவதோ கிடையாது.

மேலும், படத்தில் எங்கேயும் பட்டியலின மக்கள் படும் கஷ்டங்களை காட்டுவதே இல்லை என்பது மிகப்பெரிய மாரி செல்வராஜின் சமரச அரசியல் என்றே தெரிகிறது என இந்த படம் குறித்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.

அரசியலையும் ஒழுங்கா காட்டல: சாதிச் சங்கத் தலைவர்கள் காலில் பகத் ஃபாசில் விழுந்தும் அவருக்கு எந்தவொரு நன்மையும் நடக்கவில்லை. பெரிய சங்கத் தலைவரை அசால்ட்டாக வீட்டுக்கு அழைத்து வந்து கொலை செய்த பின்னரும் எந்தவொரு கலவரமும் பிரச்சனையும் வெடிக்கவில்லை.

வீடியோவில் மண்ணுன்னு என்ன கூப்பிடுறாங்க, என் பேரு மாமன்னன் என வடிவேலு வசனம் பேசியதும் மக்கள் எப்படி ஓட்டு போடுறாங்க என்பதற்கும், மக்களுக்காக என்ன செய்தார் வடிவேலு, ஏன் அவரை மறுபடியும் பகத் ஃபாசிலின் பணத்தை எல்லாம் ஓட்டுக்காக வாங்கிக் கொண்டும் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர் என்கிற கேள்விக்கெல்லாம் மாரி செல்வராஜ் சரியான அரசியல் புரிதலே இல்லாமல் படத்தை எடுத்துள்ளார் என்றே விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

உதயநிதிக்கான படமா: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்ததே அரசியல் லாபத்திற்காக என்பது கூட புரிந்துக் கொள்ளாமல் தனக்கு பெரிய படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என மாரி செல்வராஜ் தான் பேசும் அரசியலில் இருந்தே சமரசம் செய்துக் கொண்டாரா என்கிற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

மேலும், படத்தில் முதலமைச்சராக வரும் தலைமைக்கும் எந்தவித களங்கமும் ஏற்பட்டு விடக் கூடாது என்றும் முதல்வரே உதயநிதியிடம் பேசும் காட்சிகளும் அதை ஒட்டியே படமாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் படத்துக்கான தேவையே நீர்த்துப்போக செய்யப்பட்டு விட்டதாகவும் ஏகப்பட்ட விமர்சனங்களை முன் வைத்து ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் முழு அரசியல் விமர்சன வீடியோ வெளியாகி உள்ளது. கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X