கர்ணன் படத்துல மட்டும் வயலென்ஸ் ஏன்?.. மாரி செல்வராஜிடம் கேட்ட ரசிகர்.. அவர் பதில் என்ன தெரியுமா?

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜிடம் ரசிகர் ஒருவர் கர்ணன் படத்தில் மட்டும் ஏன் கதாநாயகன் சண்டை போடுகிறான். நீங்கள் இயக்கிய மற்ற படங்களில் அப்படி இல்லையே என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு மாதிரி செல்வராஜ் சொன்ன பதில் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி சமூகத்தில் பல விவாதங்களை எழுப்பியது.

Mari Selvaraj answered for Why Karnan chose violence among his other 3 movies


இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார் யார் இவர் என அனைத்து தரப்பினரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாரி செல்வராஜின் முதல் படமே அமைந்தது.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்: பா. ரஞ்சித்தை தொடர்ந்து படங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் என வரிசையாக அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் தரமாகவும் சமூகத்தில் விவாதங்களையும் கிளப்பின. அடுத்ததாக வாழை எனும் படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கிறது. மேலும், சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கபடி படத்தையும் இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

கர்ணன் மட்டும் ஏன் சண்டை போடுகிறான்: மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் நாயகன் கதிர் ஆதிக்க சாதியினர் கொடுமையை எதிர்த்து சண்டை போடாமல் தனது கல்வியால் அவர்களை பின்னுக்குத் தள்ளுகிறான். மாமன்னன் படத்தில் நாயகன் உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியாக முன்னுக்கு வந்து தனது இடத்தை பிடிக்கிறான். ஆனால், கர்ணன் படத்தில் மட்டும் தனுஷ் வயலென்ஸை தேர்வு செய்து சண்டைப் போட்டு காவல்துறை அதிகாரியை கழுத்து அறுத்து கொல்வது ஏன்? என்கிற கேள்வியை எழுப்பினார்.

மாரி செல்வராஜ் பதில்: பரியேறும் பெருமாள் படத்தை முதல் படமாக பார்க்காதீங்க, அந்த ஆர்டரை மாற்றிப் போடுங்க கர்ணன் படத்தை முதல் படமாக பாருங்க, பரியேறும் பெருமாள் இரண்டாவது படம் மற்றும் மாமன்னன் படத்தை 3வது படமாக பாருங்கள். அப்போ உங்களுக்குப் புரியும் என்றும் அடுத்து ரிலீஸ் ஆகப் போகிற வாழை படம் தான் முதல் படம் என்றும் கூறியுள்ளார். வாழை படம் கர்ணன் படத்தை விட வயலென்ஸ் படமாக இருக்கும் எனக் கூறுகிறாரா மாரி செல்வராஜ் என்கிற கேள்வியும் இதன் மூலம் எழுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X