மாரி செல்வராஜ் தனுஷ் இணையும் புதிய கூட்டணி… நட்டியும் நடிக்கிறார்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நடராஜன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் படம் வசூலில் அசுர வேட்டை போட்டது. இதனையடுத்து தனுசின் மார்கெட் மும்மடங்கு உயர்ந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் நல்ல படங்களுக்கு இடையே கமர்சியல் படங்கள் என்ற ஃபார்முலாவிலே தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த ஃபார்முலா படி இவருக்கு அடுத்து ரிலீஸாக போகும் படம் தான் பட்டாசு.

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைப்பெற்றது .கிட்டதட்ட 67 நாட்களுக்கு மேல் கடந்து தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு பிறகு பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நடராஜன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷூக்கு தற்போது பல படங்கள் கைவசம் உள்ளன, சத்யஜோதி பிலிம்ஸ்க்கு மட்டும் இரு படங்கள் நடித்து வருகிறார். ஒன்று பட்டாசு ஆகும் மற்றொன்று ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாருடன் ஒரு படமாகும். மேலும் தனுஷ் சன்பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தனுஷ் ஆர்.எஸ். துரைசெந்தில் குமார் இயக்கத்தில் பட்டாசு படத்தில் நடித்து வருகிறார். இந்த இப்படம் ஜனவரியில் வெளிவர இருக்கிறது.


Click it and Unblock the Notifications











