Bison Box Office: துருவ் விக்ரமின் தீபாவளி பிளாக்பஸ்டர்.. எத்தனை கோடிகள் வசூல் தெரியுமா?

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், பைசன். படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் முதல் 5 நாளில் ரூபாய் 35 கோடிகளுக்கு மேல் தமிழில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைசன் - காளமாடன் படம் இந்திய கபடி அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கி உள்ளார்கள். படத்தில் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை படமாக்கி உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, இந்த படத்திற்கு ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளதை நினைத்து படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

Mari Selvaraj Dhruv Vikram Bison Movie 5 Days Box Office Collection Cross 35 Crores in Tamil Language

படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. மேலும் அப்லாஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை பாராட்டிய பலரும், " இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்திற்கு எதிராக மாரி செல்வராஜ் பேசிவிட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. மிகவும் சென்சிட்டிவான பிரச்னை இது, இருபுறமும் தவறுகளும், இருபுறமும் அவரவர் தரப்பு நியாயங்களும் இருக்கும். இவர்களுக்கு இடையிலான முரணை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார், மாரி. இந்த கதாபாத்திரங்களின் மூலம் மொத்த சமூகத்தையும் நோக்கி கேள்வி கேட்டுள்ளார் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

பாராட்டு: படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு எந்த அளவுக்கு பாராட்டப்படுகிறதோ அதே அளவுக்கு நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் பாராட்டப்படுகிறது. பசுபதியின் நடிப்பை பார்த்துவிட்டு இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதே கொடுக்கலாம் என்று பாராட்டி வருகிறார்கள். இந்த தீபாவளிக்கு வெளியான படங்களான, டீசல், பைசன் மற்றும் டியூட் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

Mari Selvaraj Dhruv Vikram Bison Movie 5 Days Box Office Collection Cross 35 Crores in Tamil Language

வசூல்: இதில் டியூட் படம் முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இப்படி இருக்கையில், பைசன் படம் முதல் ஐந்து நாளில் ரூபாய் 35 கோடிகளை தமிழில் மட்டும் வசூலித்துள்ளதாக தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் வசூல் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X