டம்மி வைக்க சொன்ன உதயநிதி.. கேட்காமல் மாரி செல்வராஜ் செய்த செயல்.. ஒருத்தருக்கு கழுத்தில் செம அடி!
சென்னை: மாமன்னன் படத்திற்காக ப்ரமோஷனில் மாரி செல்வராஜ் பேசுவது எல்லாமே படத்துக்கு ப்ரமோஷனாக மாறுகிறதா? அல்லது எதிராக போகிறதா என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிஸ்டன்ட் டைரக்டர்களை போட்டு அடிப்பார் மாரி செல்வராஜ் என்றும் ஷாட் நல்லா வரவில்லை என்றால் கோபத்தில் நடிகர்களையே போட்டு அடிப்பார் என்றும் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
இந்நிலையில், சமீபத்தில் மாரி செல்வராஜ் அளித்த இன்னொரு பேட்டியில் திடுக்கிடும் மேலும், சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
மாமன்னன் புக்கிங் ஆரம்பம்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி உள்ளது.

மாரி செல்வராஜுக்கு எதிராக கமல் ரசிகர்கள் மட்டுமின்றி சில சமூக மக்களே பெரும் கோபத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்த படத்துக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்து விடும்.
பக்ரீத் ரிலீஸ்: பன்றிக் குட்டியுடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படுவதிலும் ஏதாவது குறியீடு உள்ளதா மாரி செல்வராஜ் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஏகப்பட்ட மீம்களை போட்டு எந்தளவுக்கு ட்ரோல் செய்ய முடியுமோ அந்தளவுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆனால், படம் வெளியான பின்னர் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை போல மாமன்னன் படமும் கவனம் ஈர்க்கும் என்றே உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
உதயநிதி பேச்சை கேட்கவில்லை: ஷூட்டிங்கில் உருட்டுக் கட்டையில் ஹீரோக்கள் வில்லன்களை வெளுப்பது போலவும், கத்தி எடுத்து சதக் சதக்குன்னு குத்துவது போலவும் காட்சிகளை படமாக்க டம்மிக்களைத் தான் பயன்படுத்துவார்கள். எஃபெக்ட்ஸ் மற்றும் மேக்கப் மூலமாகத்தான் அதனை ரியாலிட்டியாக மாற்றுவார்கள்.
ஆனால், இயக்குநர் மாரி செல்வராஜ் பூந்தொட்டி ஒன்றை எடுத்து போர்டு ஒன்றின் மேல் அடிக்கும் காட்சியில் டம்மி வைப்பதற்கு பதில் ரியல் ஒன்றையே வைத்திருக்கிறார். டம்மி வைங்க என உதயநிதி சொல்லியும் மாரி செல்வராஜ் கேட்கவில்லையாம்.
கழுத்திலேயே அடி: டம்மி வச்சு அடிச்சா ரியாலிட்டியா இருக்காதுன்னு சொல்லிட்டு வெயிட்டே இல்லை சார், ரியலாவே தூக்கிப் போடுங்க நல்லா இருக்கும் எனக் கூறியிருக்கிறார். உதயநிதியும் போர்டில் தூக்கி அடிக்க எடுத்து வீசும் போது, இம்சை அரசன் விடும் அம்பு போல அந்த இடத்தில் படாமல் அங்கே அருகில் இருந்த ஒருத்தர் கழுத்தின் மீது போய் விழுந்து அவருக்கு செம அடியாம்.
அச்சச்சோ அவருக்கு என்ன ஆச்சு என உதயநிதி பதற, ஏன் சார் ஷாட் நல்லா தான் இருக்கு.. அப்படியே போகட்டும் என்றாராம் மாரி செல்வராஜ். அவருக்கு அடிபட்டு இருக்குங்க என்று சொல்லி உதயநிதி தான் ஷாட்டை நிறுத்தி விட்டு அந்த நபருக்கு முதலுதவி செய்ததாக மாரி செல்வராஜே யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி அடுத்த ரவுண்டு ட்ரோலுக்கு ஆளாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











