2018ம் ஆண்டின் சிறந்த படம் பரியேறும் பெருமாள் – ஃபிலிம் ஃபேர் விருதுக்கு மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!

சென்னை: 66வது ஃபிலிம் ஃபேர் விருது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில், தென்னிந்திய நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் ஒன்றுக்கூடி விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் 2018ம் ஆண்டின் சிறந்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் வெற்றிப்பெற்றது.

பரியேறும் பெருமாள் படத்திற்கு விருது கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

சினிமா 2019

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ரீதியில் இன்னமும் தொடரும் வன்முறைகளையும், கொடூரங்களையும் கருப்பி நாய் மூலமும், டீ கிளாஸ் வித்தியாசத்தின் மூலமாகவும் சுளீரென வெளிப்படுத்தியிருந்தார்.

கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு என படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது. 66வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருதும் பரியேறும் பெருமாள் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ், 2018ம் ஆண்டின் சிறந்த படமாக பரியேறும் பெருமாளை ஃபிலிம் ஃபேர் தேர்ந்தெடுத்து கெளரவப்படுத்தியது மகிழ்ச்சி என ட்வீட் போட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

2020ல் தனுஷ் படம்

வரும் 2020ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படம் சிறந்த படமாக தேர்வாகும் என இந்த ரசிகர் தனது வாழ்த்துக்களை இயக்குநர் மாரி செல்வராஜுக்கு தெரிவித்துள்ளார்.

தேசிய விருது

பரியேறும் பெருமாள் படத்துக்கு தேசிய விருதே கொடுத்திருக்கலாம் என இந்த ரசிகர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மரண வெயிட்டிங்

பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் தனுஷ் படத்திற்கு ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்துக் கிடக்கின்றனர். தனுஷ் அண்ணாவை நல்லா செதுக்குங்க என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X