அடக்கடவுளே.. தனுஷின் கர்ணன் படத்தில் நடித்த குதிரை அலெக்ஸ் மரணம்.. சோகத்தில் மாரி செல்வராஜ்

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தில் நடித்த குதிரை அலெக்ஸ் உயிரிழந்தது.

Recommended Video

VIDUTHALAI படத்தில் இனையும் Gautam Menon | Soori, Vijay Sethupathi | Vetrimaran

கர்ணன் படத்தில் அந்த குதிரை முக்கிய பங்காற்றியிருக்கும். அதன் மறைவு இயக்குநர் மாரி செல்வராஜை வெகுவாக பாதித்துள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரை அலெக்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ஹார்ட் பிரேக்கிங் எமோஜியை ஷேர் செய்துள்ளார்.

தனுஷின் கர்ணன்

தனுஷின் கர்ணன்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் கர்ணன். குறிப்பிட்ட இன மக்களுக்கு அடிப்படை வசதியான பேருந்து சேவையை கூட கொடுக்க மறுப்பதற்கு எதிராக நாயகன் போராடும் கதை தான் கர்ணன்.

மனிதர்களுக்கு இணையாக

மனிதர்களுக்கு இணையாக

பரியேறும் பெருமாள் படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் உடன் இணைந்து நடித்திருக்கும். அதே போல கர்ணன் படத்தில் குதிரை, யானை மற்றும் கழுதை உள்ளிட்ட பல விலங்குகளும் மனிதர்களுக்கு இணையாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கதையை நகர்த்தி கொண்டு செல்ல பெரிதும் உதவின.

கர்ணன் குதிரை மரணம்

கர்ணன் குதிரை மரணம்

கர்ணன் படத்தில் இடம்பெற்ற குதிரை அலெக்ஸ் திடீரென இறந்து விட்டதை அறிந்த இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், குதிரை அலெக்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ஹார்ட் பிரேக்கிங் எமோஜியை பதிவிட்டு அதற்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

அலெக்ஸுக்கு என்ன ஆச்சு

அலெக்ஸுக்கு என்ன ஆச்சு

இயக்குநர் மாரி செல்வராஜின் பதிவை பார்த்த பலரும் குதிரை அலெக்ஸ் உயிரிழந்ததை அறிந்து அதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் மாரி செல்வராஜ் போட்ட பதிவில் குதிரை அலெக்ஸ் இறந்தது குறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில், சில ரசிகர்கள் அலெக்சுக்கு என்ன ஆச்சு அண்ணா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அலெக்ஸ் இறந்து விட்டது

அலெக்ஸ் இறந்து விட்டது

சில ரசிகர்களின் கேள்விக்கு வேறு சில தனுஷ் ரசிகர்கள் குதிரை அலெக்ஸ் இறந்து விட்டது. அதற்காகத்தான் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்து இப்படியொரு பதிவை போட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுத்து கர்ணன் படத்தில் தனுஷ் அலெக்ஸ் உடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

குதிரை அலெக்ஸ் உயிரிழந்த விவரம் அறிந்த தனுஷ் ரசிகர்கள் அலெக்ஸ் எப்படி இறந்தது என்றும், அதன் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் RIP போட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கர்ணன் பட புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் குதிரையா

பொன்னியின் செல்வன் குதிரையா

சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை ஒன்று உயிரிழந்தது தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அந்த குதிரையா? என்கிற ரீதியிலும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

துருவ் விக்ரம் படம்

துருவ் விக்ரம் படம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள மற்றும் கர்ணன் என இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் இயக்கத்தில் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. கபடி வீரராக அந்த படத்தில் நடிக்க உள்ள துருவ் விக்ரம் அந்த படத்திற்காக கபடி கற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X