கர்ணனை காட்டிய கையோடு வாரிசு நடிகரை இயக்கப்போகும் மாரி செல்வராஜ்.. யாருன்னு பாருங்க!

சென்னை: கர்ணன் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் பிரபல வாரிசு நடிகரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கிய படம் கர்ணன்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த படம்..

அடுத்த படம்..

பாக்ஸ் ஆபிசிலும் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் நடிகர் குறித்தும் படத்தின் கதை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

அதன்படி மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தின் கதை தமிழக கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தின் மூலம் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் துருவ்.

 கார்த்திக் சுப்புராஜ் உண்மை சம்பவம்

கார்த்திக் சுப்புராஜ் உண்மை சம்பவம்

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் துருவ் விக்ரம், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மாரி செல்வராஜின் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதியிலிருந்து வரும் ஒரு இளைஞர் இறுதியில் விளையாட்டுக்காக நாட்டின் மிக உயரிய கவுரவத்தையும் கோல்டு மெடலையும் வென்ற உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது.

மூன்றாவது படம்

மூன்றாவது படம்

இதற்காக விரைவில் துருவ் விக்ரம் அதற்கான பயிற்சியை மேற்கொள்வார் என தெரிகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் துருவ் விக்ரமின் மூன்றாவது படம் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X