மாரி செல்வராஜ் ரொம்ப மோசம்.. 50 டேக் எடுக்கிறார்... 'மாமன்னன்' பட அனுபவம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தையும் அதே பாணியில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் 50 டேக் எடுக்கிறார் என படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

தரமான இயக்குனர் என்ற முத்திரை

தரமான இயக்குனர் என்ற முத்திரை

இயக்குநர் பா ரஞ்சித் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நீலம் புரோடக்சன் என்ற நிறுவனத்தின் மூலம் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார் அந்த வகையில் நீலம் புரோடக்சன் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணிபுரிந்த மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே தரமான இயக்குநர் என்ற முத்திரையைப் பதித்தார். பரியேறும் பெருமாள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்று குவித்தது

உண்மை சம்பவங்களை அடிப்படையாக

உண்மை சம்பவங்களை அடிப்படையாக

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அதற்கான நிதியையும் அனைவரும் புரியும் வகையில் இப்படத்தில் கூறியிருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்க இப்படத்தை கொண்டாடினார்கள். பரியேறும் பெருமாள் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து இயக்கிய திரைப்படம் கர்ணன். தனுஷ் , லால்,ரஜிஷா விஜயன், யோகி பாபு,கௌரி கிஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்க இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படமும் மாரி செல்வராஜ் க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

மாமன்னன்

மாமன்னன்

இந்த நிலையில் பிரபல கபடி வீரர் குறித்த படத்தை துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து இயக்கி வந்த மாரி செல்வராஜ் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறார். கர்ணன் படம் போலவே இந்த படமும் சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை அழுத்தமாகப் பேச உள்ளது.

50 டேக் எடுக்கிறார்

50 டேக் எடுக்கிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்கும்போது அருண்ராஜா காமராஜ் பரவாயில்லை 20 டேக் வரைக்கும் தான் எடுப்பார் ஆனால் மாரி செல்வராஜ் பயங்கரமா எடுக்கிறார். 50 டேக் வரைக்கும் எடுக்கிறார். ஒவ்வொரு வசனத்தையும் அவர் நடித்து காட்டி பார்த்து பார்த்து எடுக்கிறார். 60 நாளுக்குள் படத்தை முடித்துவிட முடியுமா என்பது இப்போது சந்தேகமாக உள்ளது என அந்த நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X