அட செமயா இருக்காங்களே.. மாரி செல்வராஜ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். அவர் இதுவரை இயக்கிய பரியெறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய நான்கு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. முக்கியமாக அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான வாழை திரைப்படம் அனைவரையும் கலங்கடிக்க செய்தது. அடுத்ததாக பைசன் என்ற படத்தை விக்ரமின் மகன் துருவ்வை வைத்து இயக்கிவருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது.

mari selvaraj vaazhai

கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.

மாமன்னன் மாரி செல்வராஜ்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்திலும் யாரும் பேச துணியாத அல்லது மறந்துபோன அரசியலை பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.

வாழை: மாமன்னன் படத்துக்கு பிறகு வாழை படத்தை இயக்கினார். தனது சிறு வயது வாழ்க்கையில் நடந்த அவலங்களை திரைக்கதையாக்கி வலியோடு கொடுத்திருந்தார். படம் பார்த்த செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை தங்களது பெரும் ஆதரவை படத்துக்கு கொடுத்தார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே வெற்றியடைந்திருப்பதால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறார் மாரி.

பொங்கல் கொண்டாட்டம்: அடுத்ததாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வாழ்த்தோடு சேர்த்து புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் அவரது மகளும், மகனும் கைகளில் கரும்போடு இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னே பறக்கும் பன்றிக்குட்டி புகைப்படமும் இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் அட ஒரே ஃப்ரேமில் இத்தனை விஷயங்களா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X