முன்னாள் முதலமைச்சரை சந்தித்த மாரி செல்வராஜ்.. உதயநிதி ஸ்டாலின் வெறப்பா நிக்கிறாரேப்பா

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியானது. இதில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களிலும் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் திமுக அல்லாத திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் ஆட்சி அமைத்தார்.

தவெக ஆட்சி அமைக்க திமுக ஒரு போதும் தடையாக இருக்காது என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்,. அதன் பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்.

Mari Selvaraj Meets Former CM M K Stalin Netizens Discuss Udhayanidhi Stalin s Viral Expression

மாரி செல்வராஜ்: இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் புகைடங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது அவர்களுடன் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், " பேரன்பின் நிமித்தமாக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Mari Selvaraj Meets Former CM M K Stalin Netizens Discuss Udhayanidhi Stalin s Viral Expression

கமல்ஹாசன்: இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களில் உதயநிதி ஸ்டாலின் வெறப்பாக இருப்பதால், இணையவாசிகள் பலரும் அது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல் கமல்ஹாசன் மே 14ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், " தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. மு.க. ஸ்டாலினையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. உதயநிதி ஸ்டாலினையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X