அணில் போல துள்ளிக் குதித்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.. ஹேப்பி ராஜ் படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்

சென்னை: இயக்குநர் மரிய ராஜ் இளஞ்செழியன் இயக்கத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், அப்பாஸ், ஜார்ஜ் மரியான், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படி இருக்கும்போது படத்தையும் மொத்த படக்குழுவையும் இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், " ஹேப்பி ராஜ் திரைப்படம் பார்த்தேன். வெறும் கொண்டாட்டமும் குதூகலமும் மட்டுமே நிரப்ப பட்டு வருகிற இன்னொரு சினிமாவாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருந்தது ஹேப்பி ராஜ். குதிரை முட்டை என்ற கேலி வார்த்தையையும் அதன் வலியையும் ஏற்று நடித்திருந்த ஜார்ஜ் மரியன் அவர்களின் இருப்பும் சிரிப்பும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. நல்ல கதைக்குள் ஒரு அணிலை போல துள்ளி குதித்திருக்கும் ஜீ.வி பிரகாஷ் சார் அவர்களுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் ப்ரியமும் வாழ்த்துகளும்" என்று பதிவிட்டுள்ளார்.

Mari Selvaraj Praises GV Prakash s Happy Raj Calls It an Emotional Surprise

ஜி.வி. பிரகாஷ்: இவரது பதிவுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல் மாரி செல்வராஜின் பாராட்டுகளுக்கு, மிகவும் நன்றிகள் சார், எங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநரிடம் இருந்து இது போன்ற பாராட்டு கிடைத்துள்ளது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித்: ஏற்கனவே படம் பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் ஜார்ஜ் மரியானை கட்டி பிடித்து, இந்த படத்தின் நாயகன் நீங்கள் தான். ஜி.வி. பிரகாஷ்குமார் ஒரு துணை நடிகர் போலத்தான் நடித்துள்ளார் என்று பாராட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

நம்பிக்கை: படம் பார்த்த பலரும், படத்தை பாராட்டி வருகிறார்கள். அப்பாஸ் போன்ற நடிகரை மீண்டும் நடிக்க வைத்தது, அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது அருமை என்றும் பாராட்டி வருகிறார்கள். மேலும் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா, லவ்வர் படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு கதையம்சம் கொண்ட, ஜனரஞ்சகமான படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார் என்றும் பாராட்டி வருகிறார்கள். படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X