வீடியோ காலில் மாரி செல்வராஜிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்
சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் சமீபத்தில் ரிலீசானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனித்துவமான கதை, திரைக்கதை, நடிப்பிற்காக மாரி செல்வராஜுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தற்போது கர்ணன் பட டைரக்டர் மாரி செல்வராஜ், தனுஷ் மற்றும் டைரக்டர் ராம் ஆகியோர் வீடியோ காலில் தன்னை பாராட்டியதை ஸ்கிரீன் ஷாட் ஃபோட்டோ உடன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், உண்மையிலேயே நான் கர்ணன் பட வெற்றியை உணர்ந்த தருணம். இந்த தருணத்தை ஏற்படுத்திய தனுஷுக்கு என் மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
கர்ணன் படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜிஷா, லால், யோகிபாபு, நடராஜன் சுப்ரமணியன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, கவுரி ஜி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 1999 ல் நடந்த மாஞ்சோலை கலவரம் மற்றும், 1997 ல் மேலவளவில் நடந்த மோதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் கர்ணன் படம்.
ஏப்ரல் 9 ம் தேதி கர்ணன் படம், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த ஆண்டே வெளியிடப்பட வேண்டிய இந்த படம், லாக்டவுன் காரணமாக தள்ளி போடப்பட்டது. அரசு தற்போது விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ட்விட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











