நானே பதட்டமாத்தான் இருக்கேன்.. எனக்கு அந்த தகுதி கிடையாது.. பம்மிய மாரி செல்வராஜ்!
சென்னை: ரசிகர்களுடன் கலந்துரையாடல் எனும் நிகழ்ச்சியில் மாரி செல்வராஜிடம் ரசிகர்கள் பலர் அடுக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திருப்பி ரசிகர்களை பார்த்தே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த மாரி செல்வராஜ் சில இடங்களில் கடுப்பாகி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அந்த படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இந்நிலையில், ரசிகர்கள் அவரிடம் மாமன்னன் படத்தில் பன்றி வளர்ப்பை எப்படி அப்படி காட்டினீர்கள் என்றும் மாமன்னன் படத்தில் இரண்டு பெரிய கட்சிகளும் ஒடுக்கப்பட்டவர்களை நசுக்கத்தானே செய்கிறது என பல கேள்விகளை அடுக்கி உள்ளனர்.
மாரி செல்வராஜ்: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என ஒவ்வொரு படமாக மாரி செல்வராஜ் இயக்க இயக்க சமூகத்தில் ஏகப்பட்ட கேள்விகளும் சர்ச்சைகளும் வெடிக்கத்தான் செய்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறி மாரி செல்வராஜ் தனது படங்களை கொடுத்து வருகிறார். பா. ரஞ்சித்தை தொடர்ந்து சாதிய படங்களை மாரி செல்வராஜ் எடுத்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.
சாதியம் ஏன் தெரியுது: மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள். மாமன்னன் படத்தை இயக்கி மகுடம் சூட்டியிருக்கீங்க. உங்களுடைய படங்களில் கம்யூனிசம் பேசப்படுவது சிறப்பான விஷயம் தான். ஆனால், சாதீயம் ஏன் பூசப்படுது என ரசிகர் ஒருவர் கேட்க ஆரம்பத்திலேயே மாரி செல்வராஜ் கடுப்பாகி விட்டார். சாதி எங்கே தெரியுது மாமன்னன் படத்தில் என மாரி செல்வராஜ் கேட்க, பகத் ஃபாசிலை காட்டும் போதும் சரி, உதயநிதியை காட்டும் போது சரி, அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்கள் என்பதை தெளிவாக காட்டுறீங்களே எனக் கேட்க, நீங்களே ஒரு முன் முடிவுக்கு வந்த பின்னர் படத்தை பார்த்தால் அப்படித்தான் தெரியும். மீண்டும் படத்தை போய் பாருங்க என கடுப்பாகி விட்டார் மாரி செல்வராஜ்.
நானே பதட்டத்துல இருக்கேன்: இன்னொரு ரசிகர் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் ஒடுக்கிக் கொண்டு தானே இருக்கின்றனர். தனி தொகுதி என்பது இல்லாமல் இருந்தால், அவருக்கு சீட் கிடைத்திருக்குமா? என்கிற கேள்வியை எழுப்ப, இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீங்க, நானே பதட்டத்துல இருக்கேன். எனக்கு படம் எடுக்கத்தான் தெரியும். அரசியல் தலைவர்களிடம் சண்டை போடும் தகுதி எனக்கு இல்லை. அது என் வேலையும் இல்லை. நீங்க எல்லாம் போய் கேள்வி கேளுங்க என பிளேட்டை திருப்பி விட்டார்.
இயக்குநரிடம் ஏன் கேட்குறீங்க: பரியேறும் பெருமாள் எனக்கு ரொம்பவே பிடித்த படம். அதே போல மாமன்னன் படத்தில் அந்த நாற்காலியை வைத்து சிறு விஷயமாக இருந்தாலும், அதில், உள்ள ஒரு பெரிய விஷயத்தை காட்டியது சூப்பர். பெண்கள் வீட்டின் பெரியவர்களான ஆண்கள் வந்தால் உட்கார கூட கூடாது என சொல்வார்கள். எனக்கு அந்த விஷயத்துடன் கனெக்ட் ஆச்சு, ரொம்பவே அருமை என சொல்லிவிட்டு, ஆனால், பன்றி மேய்க்கும் காட்சியை காட்டும் போது ரொம்ப பாசமா செல்லமா வளர்ப்பது போல காட்டுறீங்க, ஆனால், உண்மையாகவே பன்றி மேய்ப்பவர்கள் அப்படி பண்றது இல்லையே? எதை குறிக்க அதை அப்படி காட்டுனீங்கன்னு கேள்வி கேட்டதும், அப்செட்டான மாரி செல்வராஜ் இயக்குநரிடம் ஏன் இந்த கேள்வி எல்லாம் கேட்குறீங்க, உங்களிடமே கேட்டுக்கோங்க, உங்களுக்கு ஒன்றும் தோன்றும் படம் பார்த்த இன்னொருத்தருக்கு ஒன்று தோன்றும் அவரிடம் விவாதியுங்கள் என சமாளிக்க மட்டுமே மாரி செல்வராஜ் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











