twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய கவிதை தொகுப்பு... யாரு வெளியிட்டுருக்காருன்னு பாருங்க!

    |

    சென்னை : நடிகர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இவரது முந்தைய படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

    4 நாட்களில் ரூ.550 கோடி வசூல்... மிரட்டலான வசூலில் கேஜிஎப் 2 படம் 4 நாட்களில் ரூ.550 கோடி வசூல்... மிரட்டலான வசூலில் கேஜிஎப் 2 படம்

    நடிகர் உதயநிதி ஸ்டாலின்

    நடிகர் உதயநிதி ஸ்டாலின்

    நடிகர் உதயநிதி ஸ்டாலின் அரசியல், நடிப்பு, தயாரிப்பு என பன்முகங்களில் செயலாற்றி வருகிறார். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி விநியோகித்தும் சில படங்களை தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த படங்களில் நடித்துவந்த இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

    மாமன்னன் படத்தில் உதயநிதி

    மாமன்னன் படத்தில் உதயநிதி

    தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தில் வடிவேலு காமெடி கலாட்டாக்களை செய்யவுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சிறப்பான படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

    மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு

    மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு

    சிறப்பான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ள மாரி செல்வராஜ் சிறந்த எழுத்தாளரும்கூட. இவரது தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. இந்நிலையில் மூன்றாவது நூலாக உச்சினியென்பது என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    வடிவேலு வெளியிட்ட கவிதை தொகுப்பு

    வடிவேலு வெளியிட்ட கவிதை தொகுப்பு

    கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த கவிதைத் தொகுப்பை அவரது மாமன்னன் படத்தில் நடித்துவரும் வைகைப்புயல் வடிவேலு தற்போது வெளியிட்டுள்ளார். இந்த கவிதை தொகுப்பு அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது. அவரது முந்தைய படைப்புகளை போலவே இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாதீய பாகுபாடு

    சாதீய பாகுபாடு

    மாரி செல்வராஜின் முந்தைய படங்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்கள் சாதிய பாகுபாட்டை கேள்விக்குள்ளாக்கியது. இந்த நூற்றாண்டிலும் பல இடங்களில் மக்கள் இதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மாமன்னன் படம் எந்த மாதிரியான படைப்பாக அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Vadivelu released poem collection of director Mari Selvaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X