Mari Selvaraj: சீமான் வெங்காயம் உரித்து கொண்டே அதை செய்வார்.. மேடையிலே பளிச்சுனு சொன்ன மாரி செல்வராஜ்
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் என பன்முகக் கலைஞர் சித்ரா லக்ஷமணன் தனது டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனல் சார்பாக பிரமாண்டமான விருது வழங்கும் விழாவை நடத்தினார். அதில் தமிழ் சினிமாவில் சம காலத்தில் உள்ள தலைசிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினார். இந்த வரிசையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படமான பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்க்கும் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் தனக்கு விருது வழங்கி பாராட்டி பேசிய சீமான் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது.
விருது வழங்கிய சீமான் மாரி செல்வராஜ் குறித்து பேசுகையில், சம காலத்தில் இருக்கும் தலைசிறந்த திரைக்கலைஞர்களில் ஒருவர் எனது தம்பி மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து பைசன் படம் வரை அவர் கையாண்ட கதைக்களம் என்பது கத்தி மீது நடப்பதைப் போன்றது. ஒரு பிரச்னையான விஷயத்தை கையில் எடுத்து அதை பிரச்னை இல்லாமல் படமாக்குவது என்பது எல்லோருக்கும் கைவந்துவிடாது. இந்த சிறிய வயதில் இவ்வளவு முதிர்ச்சியான அறிவு பாராட்டுக்குரியது.
எங்கள் மண்ணின் கதையை எந்தவிதமான மிகையும் இல்லாமல் காட்சிப்படுத்துவதில் சிறந்தவராக திகழ்கிறார். அதேபோல் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில் பாடல்களில் வார்த்தைகளை கையாண்டு பாடல்களை எழுதுகிறார் என்று மாரி செல்வராஜை பாராட்டி பேசினார்.

மாரி - சீமான்: அதேபோல் சீமான் குறித்து மாரி செல்வராஜ் கூறும் போது, " என்னை எனது முதல் படத்தில் இருந்தே பாராட்டி வருபவர் அண்ணன் சீமான். எனது படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் அவரால் உடனே படத்தை பார்க்க முடியவில்லை என்றாலுமே கூட உடனே போன் செய்து அண்ணன் இந்த மாதிரி இவ்வளவு வேலை நெருக்கடியில் இருக்கிறேன். அதை முடித்துவிட்டு படம் பார்த்துவிடுகிறேன் என்பதையும் என்னிடத்தில் போன் செய்து கூறுவார். படம் பார்த்து விட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் சரி, பகல், இரவு, நள்ளிரவு என்று எல்லாம் இல்லாமல் உடனே போன் செய்து படம் குறித்து பேசுவார்.
வெங்காயம் உரித்துக் கொண்டே: சீமான் அண்ணனுக்கு நினைவில் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ராம் சார் அலுவலகத்தில் வெங்காயம் உரித்து கொண்டு கதை சொல்லி உள்ளார். கறி வெட்டிக் கொண்டே கதை சொல்லி உள்ளார். அவர் கதை சொல்கிறார் என்றால், அதில் மழை வருவது போன்ற காட்சியை விவரிக்கிறார் என்றால், நமது மனதுக்குள் மழை வரவழைத்து விடுவார், அந்த அளவுக்கு கதை சொல்லுவார் என்று என்னிடத்தில் சில சொல்லி உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications