Mari Selvaraj - வழக்கமான வடிவேலு இதில் இருக்கமாட்டார் - சீக்ரெட் சொன்ன மாமன்னன் மாரிசெல்வராஜ்

சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்தில் வழக்கமான வடிவேலு இருக்கமாட்டார் என இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் அவரிடம் உதவி இயக்குநராக மாறியவர் மாரி செல்வராஜ். அதுமட்டுமின்றி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதி எழுத்தாளராகவும் ஜொலித்தவர். அதுமட்டுமின்றி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறார். ராமுக்கு மிக மிக நெருக்கமானவரும் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj Talks about Maamannnan Movie and vadivelu

பரியேறும் பெருமாள்: பல வருடங்கள் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது. அதேபோல் அவர் இயக்கிய கர்ணன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

வழக்கமான வடிவேலு இல்லை: இந்தச் சூழலில் உதயநிதியை வைத்து அவர் மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர்ம், "வழக்கமாக பார்க்கும் வடிவேலு இந்தப் படத்தில் இருக்க மாட்டார். வேறு ஒரு தளத்தில் வடிவேலுவைக் காண்பிக்க இந்தப் படத்தில் முயற்சி செய்துள்ளோம். தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும். வடிவேலு எவ்வளவு பெரிய லெஜண்ட் என்பது படம் பார்க்கும்போது தெரியும்"

எந்த மாதிரியான தாக்கம்?: இந்தப் படம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. நானே அதற்காக காத்திருக்கிறேன். பரியேறும் பெருமாள், கர்ணன் எல்லாமே எனக்கு மிகவும் வலிதரக்கூடிய படங்கள். அது என்ன மாதிரி கனெக்ட் ஆகும் என்பது குறித்து தெரிந்து வைத்திருந்தேன். மாமன்னன் படம் குறித்து எனக்கே கேள்வி உள்ளது. அந்தக் கேள்வியை ரசிகர்கள் என்னவாக பெற்றுக் கொள்வார்கள் என்பது குறித்து படம் வந்த பிறகு தான் தெரியும்

ஏ.ஆர்.ரஹ்மான் புரிந்துகொண்டார்: ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஒருவர் என்னுடைய படத்தை, அரசியலைப் புரிந்துகொண்டு அதற்கு ஆதரவாக பேசுவது, கூடவே பயணிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் பயந்துகொண்டு இருந்தேன், இதையெல்லாம் அவர் எப்படி புரிந்துகொள்வார் என்று..ஆனால் ரொம்பவே நட்புடன் இதை எல்லாம் புரிந்துகொண்டு பணியாற்றி வருகிறார். தொடர்ந்து அவருடன் பயணிக்க வேண்டும்.

Mari Selvaraj Talks about Maamannnan Movie and vadivelu

ஒன்றை முயற்சித்துள்ளோம்: ஃபஹத் ஃபாசில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் இவர்கள் எல்லாருமே வேறு வேறு ஜானரில் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். அது படம் பார்க்கும்போது நல்ல அனுபவமாக இருக்கும்.

நானும் உதயநிதியும் இணைந்துள்ளோம். அவர் அரசியலில் பெரிய இடத்தில் உள்ளார். எனக்கு என்று ஒரு அரசியல் நிலைப்பாடு உள்ளது. இருவரும் சேர்ந்து இன்றைய தமிழ் சமூகத்துக்கு ஏற்ப என்ன மாதிரியாக பயணிக்க வேண்டும் என்ற ஒன்று உள்ளது. இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தை முயற்சித்துள்ளோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X