அடி தூள். துருவ் விக்ரமின் அடுத்த படம்.. இந்த இயக்குநர் கூடவா.. பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் துருவ் விக்ரம்.
முதல் படத்திலேயே ஏற்பட்ட பல குழப்பங்களால், அடுத்த படத்தை மிகவும் ஜாக்கிரதையாக கையாள திட்டமிட்டுள்ளார்.

பாலா படம்
சேது, பிதாமகன் என சியான் விக்ரமுக்கு இரு பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் பாலா இயக்கத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாக உள்ளார் என கோலிவுட் சினிமா எதிர்பார்த்தது. அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்து வர்மா எனும் பெயரில் எடுத்தனர். ஆனால், அந்த படம் வெளியாகாமல் பிரச்சனையில் முடிந்தது.

முதலில் இருந்து
பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம், தயாரிப்பு தரப்புக்கு திருப்தியை கொடுக்கவில்லை என மறுபடியும், முதலில் இருந்து கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மாவாக உருவாகி வெளியானது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், கோலிவுட் ரசிகர்களை ஆதித்ய வர்மா திருப்தி படுத்தவில்லை.

படு தோல்வி
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம், மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது. அந்த படத்தை பாலிவுட்டில் ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் கபீர் சிங் என ரிமேக் செய்தனர், அங்கும் மெகா பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. ஆனால், தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஆதித்ய வர்மா திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

வர்மா வெளியாகிறது
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா திரைப்படம், இந்தியாவில் வெளியாகாமல், சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில், பாலாவின் அர்ஜுன் ரெட்டி வெர்ஷனையும் ரசிகர்கள் காண உள்ளனர்.

யார் இயக்குநர்
ஆதித்ய வர்மா படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து கோலிவுட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற துருவ் விக்ரம் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. அதற்கான விடையாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்ணன்
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது, தனுஷின் கர்ணன் படத்தை தீவிரமாக இயக்கி வருகிறார். விரைவில் கர்ணன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக துருவ் விக்ரமை மாரி செல்வராஜ் இயக்குவார் என தெரிகிறது. E4 என்டர்டெயின் மென்ட், இதற்கான ஒப்பந்தத்தை மாரி செல்வராஜுடன் போட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











