இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம்... இளம் நடிகருடன் கை கோர்கிறார்!
சென்னை : தங்கமீன்கள், கற்றது தமிழ் திரைப்படங்களை இயக்கிய ராமிடன் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ்.
Recommended Video
இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். அதையடுத்து துருவ் விக்ரமுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன.

துருவ்வின் அறிமுகம்
துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் அறிமுகமானார். வர்மா என்னும் தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து பின்னர் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை வெளியிட மறுக்க கிரிசாயா இயக்கத்தில் மறுபடியும் படப்பிடிப்பு நடத்தி ஆதித்யா வர்மா என்னும் தலைப்பில் படத்தை வெளியிட்டனர்.

துருவ் தந்தையுடன் கூட்டணி
ஆதித்யா வர்மாவை அடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தந்தையும், முன்னணி நடிகருமான விக்ரமுடன் இணைந்து சியான்60 என்னும் பெயரிடப்படாமல் இருக்கும் படத்தில் நடித்து வருகிறார் துருவ். இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு
மாரி செல்வராஜ் கர்ணன் படம் குறித்த அப்டேட்களை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். கர்ணன் படத்தின் முக்கிய அறிவிப்புகளை அறிவித்த பின்னர் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி விரைவில் உறுதி
கர்ணன், சியான்60 படங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளிவந்த பின்னர் மாரி செல்வராஜ்-துருவ் கூட்டணி பற்றிய தகவல்கள் விரிவாக வெளிவரும். இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 சம்மரில் தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











