தனுஷூக்கு போட்டியா… கையில் வாளுடன் நிற்கும் மாரிசெல்வராஜ்!

சென்னை : கர்ணன் படப்புகழ் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

தனுஷ் அனுப்பிய கடிதம் | Director Mari Selvaraj Speech Part 2 | Filmibeat Tamil

இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் என்ன தனுஷூக்கு போட்டியா என்று கேட்டு வருகின்றனர்

இணையத்தில் இந்த புகைப்படம் லைக்குகளை பெற்று வருகிறது.

சிறந்த எழுத்தாளர்

சிறந்த எழுத்தாளர்

மாரி செல்வராஜ் திரைப்பட இயக்குனர் மட்டும் அல்ல சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஆனந்த விகடனில் வெளியான மறக்கவே நினைக்கிறேன் என்ற தொடரின் மூலம் தமிழக மக்களை தன் வசப்படுத்தினார் மாரிசெல்வராஜ்.

பட்டித்தொட்டி எங்கும் புகழ்

பட்டித்தொட்டி எங்கும் புகழ்

இவர், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மிகப்பெரியஅளவில் வெற்றி பெற்று இவரை ஒரு திறமைனயான இயக்குனர் என அனைவரையும் சொல்லவைத்தது. இப்படத்தின் முதல் பாடலான கருப்பி என் கருப்பி வெளியாகி பட்டித் தொட்டி வரை இவரது புகழை கொண்டு சேர்த்தது.

உண்மைச்சம்பம்

உண்மைச்சம்பம்

அடுத்ததாக இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். மேலவளவு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சாதிப்பிரச்சினைகளை தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக பல விமர்சனங்கள் வந்தாலும், இந்த திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

வாள் தூக்கி நின்னான் பாரு

அப்படத்தில் தனுஷ் வாளேந்தி குதிரை மீது அமர்ந்து இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் , தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் வாளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக வாள் தூக்கி நின்னான் பாரு. வந்து சண்டை போட்ட எவனும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷூக்கு போட்டியா என்று கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X