Vaazhai Box Office: நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்.. பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி வாகை சூடும் வாழை!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் வாழை. இந்தப் படத்தினை தானே தயாரித்தும் உள்ளார். மாரி செல்வராஜின் சிறு வயதில் நடைபெற்ற மிகப்பெரிய துயரத்தை இந்தப் படத்தின் கதையாகக் கொண்டு படத்தினை எடுத்துள்ளார். திரைப்பிரபலங்கள் தொடங்கி, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழை படத்தினை பாராட்டி வருகின்றனர். படம் வெளியாகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை படமும் இடம் பெற்றிருந்தது. படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்து கொண்டு இருந்தது. குறிப்பாக பாதவத்தி பாடல் ரிலீஸ் ஆனபோது பலரது மனதிலும் ரணத்தை உண்டாக்கும் விதமாக இருந்தது. இந்தப் பாடலை மாரி செல்வராஜே எழுதியிருந்தார்.

Mari Selvaraj Vaazhai Vaazhai Box Office Collection

வாழை படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி மற்றும் நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க மாரி செல்வராஜின் பால்யத்தை மைய்யமாகக் கொண்டது என்பதால், மாரி செல்வராஜ் எழுதிய புத்தகங்களான, மறக்கவே நினைக்கின்றேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் தற்போது வார இதழில் எழுதி வரும் சம்படி ஆட்டம் ஆகியவற்றை வாசிப்பவர்களுக்குத் வாழை படத்தின் மீது தனி எதிர்பார்ப்பே ஏற்பட்டது. இவர்களில் பலர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டனர்.

முத்தமும் கண்ணீரும்: படம் பார்த்த இயக்குநர் பாலா மற்றும் சூரி மாரி செல்வராஜ்க்கு முத்தங்கள் கொடுத்து தங்களது பாராட்டைத் தெரிவித்தனர். நடிகர் தங்கதுரை அழுதுகொண்டே மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இயக்குநர் இமயம் எனப்படும் பாரதிராஜா மிகவும் பெருமையாக உள்ளது என மாரி செல்வராஜை பாராட்டினார்.

திருமாவளவன்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், வாழை படத்தத்தைப் பார்த்தபின்னர், சென்னையில் உள்ள, மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று, அவரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை மாரி செல்வராஜே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படத்தில் நடித்திருந்த சிறுவர்களையும் பாராட்டியுள்ளார். அதேபோல் மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தாயார், படத்தில் நடித்த சிறுவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மாரி செல்வராஜ்க்கு சில புத்தகங்களைப் பரிசளித்தார்.

வசூல் விபரம்: படம் கடந்த 23ஆம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் நாளில் படம் ரூபாய் 1.15 கோடிகளும் இரண்டாவது நாளில் ரூபாய் 2.40 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 3.55 கோடிகளை வசூல் செய்துள்ளது. வார இறுதி நாளான இன்றும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது. மேலும் முதல் நாள் மக்களிடம் படம் பெரும் ஆதரவு பெற்றதால், இரண்டாவது நாளில் இருந்தே படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் படத்தின் வசூல் வரும் நாட்களிலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X