நான் உங்கள் சாதி என்பதால் மட்டும் அது வேண்டாம்.. அசிங்கம்.. மாரி செல்வராஜ் அதிரடி

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கிய அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அடுத்ததாக தனுஷை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விழா ஒன்றில் அவர் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.

ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். கதிர், கயல் ஆன்ந்தி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக மாரி எழுதியிருந்த கதையும், அதை அவர் எடுத்திருந்த விதமும், இவர் வருங்காலத்தில் பெரிய இயக்குநராக வருவார் என்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் அனைவரது கண் முன்னும் கொண்டு வந்து நிறுத்தியது என்றே சொல்லலாம்.

தனுஷுடன் படம்: முதல் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அப்படத்தை அவர் எடுத்திருந்தார். இப்படமும் ஹிட்தான். அதேசமயம் முதல் படம் ஏற்படுத்திய அளவுக்கு இதில் தாக்கம் எதுவும் இல்லை; அதிலும் வரலாற்றை மாற்றி எடுத்து வைத்திருக்கிறார் என்பது படம் பார்த்த ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அதேசமயம் அப்படத்தை அவர்கள் தோல்வி படமாக மாற்றிவிடவில்லை. தொடர்ந்து அவர் இயக்கிய மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர்தான்.

Mari Selvaraj Viral Speech Don t Follow Me Blindly Director s Powerful Statement Trends Online
Photo Credit:

விக்ரம் மகனுக்கு சூப்பர் தொடக்கம்: கடைசியாக அவர் விக்ரம் மகன் துருவ்வை வைத்து பைசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸாகி மெகா ஹிட்டானது. சினிமாவில் அறிமுகமானதிலிருந்து திருப்புமுனைக்கு காத்திருந்த துருவ்வுக்கு இப்படம் அதை கொடுத்தது. ஒவ்வொரு சீனிலும் துருவ்விடமிருந்து சிறந்த நடிப்பை மாரி வாங்கி; ரசிகர்களிடமிருந்து அப்ளாஸை பெற்றுக்கொடுத்தார். மொத்தம் 50 கோடி ரூபாய்க்கும் மேலாக இப்படம் வசூலித்தது.

என்ன ஸ்பெஷல்?: மாரியின் இயக்கம் என்றாலே யாரும் பேசாத விஷயத்தை அந்தப் படம் பேசும் என்ற பிராண்ட் உருவாகிவிட்டது. அப்படி அவர் சொல்லும் விஷயங்கள் பெரும்பாலானோரிடம் வரவேற்பை பெற்றாலும்; ஒரு தரப்பினரிடம் தொடர்ந்து விமர்சனத்தை சந்திப்பதும் நினைவுகூரத்தக்கது. நல்ல படைப்பாளிக்கு எதிரிகள் அதிகம் வருவார்கள் என்பதாகத்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக தனுஷை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கவிருக்கிறார்.

மாரி செல்வராஜின் பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் மாரி செல்வராஜ். அதில் அவர் பேசுகையில், "என்னை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்ட பிறகு எனது கொள்கைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் என்னை ஃபாலோ செய்யுங்கள். நான் உங்கள் சதி என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் என்னை ஃபாலோ செய்யாதீர்கள். அது எனக்கு ஏற்படும் மிகப்பெரிய அசிங்கம்" என்றார். அவரது இந்தப் பேச்சு பலரிடம் கவனத்தை பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X