மனைவிக்கு சீமந்தம்.. சந்தோஷத்தில் மாரி செல்வராஜ்.. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இயக்குநர் பா. ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மனைவிக்கு சீமந்தம்

மனைவிக்கு சீமந்தம்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா மாரி செல்வராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தற்போது அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

இரண்டாவது குழந்தை

இரண்டாவது குழந்தை

ஏற்கனவே நவ்வி என்கிற நாஸ்தென்கா எனும் மகள் உள்ள நிலையில், தற்போது மாரி செல்வராஜின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். வெகு விரைவில் இயக்குநர் மாரி செல்வராஜிக்கு அழகான மகனோ அல்லது தேவதை போன்ற மகளோ பிறக்க அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

பா. ரஞ்சித் நேரில் வாழ்த்து

பா. ரஞ்சித் நேரில் வாழ்த்து

இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் தயாரிப்பில் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பெரு வெற்றி பெற்றார். இந்நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சியில் இயக்குநரும் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

வைரலாகும் புகைப்படங்கள்

வைரலாகும் புகைப்படங்கள்

மண்டபம் ஒன்றில் குடும்ப உறவுகள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் சூழ நடைபெற்ற வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பா. ரஞ்சித்துடன் நடிகர் கலையரசன் உள்ளிட்ட பிரபலங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புது மாப்பிள்ளை கணக்கா மாரி செல்வராஜும் மனைவியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கர்ணன் வரான்

கர்ணன் வரான்

வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகிறது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர். அசுரன் படத்திற்கு பிறகு கர்ணன் தனுஷுக்கு ஏகப்பட்ட விருதுகளை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படம்

அடுத்த படம்

கர்ணன் படத்தை முடித்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சியான் 60 படத்திற்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X